June 18, 2020

சகல சதித்திட்டங்களையும் புதிய, ஜனாதிபதி தனது திறமையால் முறியடித்தார்


தமது ஆட்சிக்காலத்தைப் போன்றே கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலும் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை COVID-19 கட்டுப்படுத்தப்பட்ட விதம் உறுதிப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கு ஜனாதிபதி வழங்கிய சரியான அரசியல் தலைமத்துவமே காரணம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து சில நாட்களுக்குள் மேலைத்தேய நாடொன்றின் தூதரக பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் அனைத்து சதித்திட்டங்களையும் புதிய ஜனாதிபதி தனது திறமையால் முறியடித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரியொருவரின் கீழ், கடும் நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உருவாக்கப்பட்ட பிரசாரத்தை பொய்ப்பித்து, ஜனாதிபதி செலயகத்தை சுற்றிவளைக்க வரும் அனைத்து ஆரப்பாட்டக்கார்களுக்கும், சுதந்திரமாக வருவதற்கும் உபசரிப்புகளை ஏற்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்க்கை வழமைக்கு திரும்பியவுடன், ஒரு சிறிய அரசியல் குழு அமெரிக்காவின் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் கருத்திற்கொள்ளாது, அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முயற்சித்த போது, பொலிஸார் அவர்களை அங்கிருந்து வௌியே எடுத்துச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி கட்டிலில் இருக்கும் போலியான வீடியோவை உருவாக்கி பின்னர் அகப்பட்ட நடிகைகள் மற்றும் ராஜபக்ஸ நிர்வாகம் உள்ள நாட்டில் இருப்பதை விட தாம் பிறந்தவுடன் வாய்க்காலில் ஏன் வீசவில்லையென கேட்ட முடி வளர்த்தவர்களும், அரச ஒடுக்குமுறைகள் தொடர்பில் கூறிக்கொண்டு ஐந்து வருடங்களின் பின்னர் மீண்டும் வௌியே இறங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொழில்சார் ஆர்ப்பாட்டக்காரர்களே அங்கு கூடியதாகவும் அவர்கள் பொலிஸாரை ஆத்திரமூட்டும் விதத்தை நன்கு அறிந்தவர்கள் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக மக்களின் நம்பிக்கையை வென்ற தலைவரான தொண்டமானின் மறைவினால் சோகத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் ஒன்று கூடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது மக்கள் அதனைப் பின்பற்றியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி இலங்கைக்கு எவ்வகையிலும் தொடர்புபடாத வௌிநாட்டு சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் அதற்கு முற்றிலும் மாறானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தைப் போன்றே ஜனாதிபதியின் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியதாக பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.

அதில் அதிககமானவர்கள், நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்களை நிரந்தரமாக்குமாறு கோரியே வந்ததாகவும், அவர்கள் கடந்த அரசாங்கத்தையே தூற்றியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான நியமனங்களை வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரை மீண்டும் ஹம்பாந்தோட்டைக்கு வர வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்கள் கூறியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

5000 ரூபா கொடுப்பனவு வழங்கிய போது அது போதாது எனவும் 65,000 ரூபாவை வழங்க வேண்டும் என அவர் கூறியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

முட்டாள்தனமாக பேச வேண்டாம் என யாரோ கூறியதால், அந்த தொகையை அவர் 20 ஆயிரம் ரூபாவாாக குறைத்துக்கொண்டதாகவும் பிரதர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a comment