Header Ads



சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான சலுகைக்காலம் நீட்டிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, மார்ச் 13ஆம் திகதியிலிருந்து ஜூன் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக 6 மாதங்கள் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 30ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக 3 மாதங்கள் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.