Header Ads



பெரஹெராவுக்கு மக்களுக்கு அனுமதி இல்லை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பு - சமயக் கிரியைகளுக்கு முதலிடம்

பாரம்பரிய மற்றும் மத சடங்குகளுக்கு முன்னுரிமை வழங்கும் பிரதான ஆலயங்களுக்கும் மற்றும் கோயில்களுக்கும் இந்த ஆண்டு ஊர்வலத்தை ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தியவதன நிலமே உள்ளிட்ட பஸ்நாயக்க நிலமைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கண்டி தலதா மாளிகை மற்றும் கதிர்காமம் , தேவினுவர மற்றும் சபராகமுவ உள்ளிட்ட கோயில்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் உச்சவங்களை கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கச் சுகாதார வழிகாட்டுதல்களின்படி முறைகளைப் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்புக்கான பணிக்குழு இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்த ஆண்டு ஊர்வலம் எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இடம்பெறும் பெரஹெராவில் பொதுமக்கள் கலந்துகொள்வதற்கும் எந்தவொரு சன்னதியின் வளாகத்தையும் காணப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கின் பிற பிரதேசங்களிலிருந்து பாத யாத்திரையா கதிர்காமம் வருகை தருவேரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சகல ஊர்வலத்திலும் குறைந்த எண்ணிக்கையிலான கலைஞர்களின் பங்கேற்பதுடன் கோவிட் தடுப்புக்கான பணிக்குழு சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

பெரஹெராவில் பங்கேற்கும் கலைஞர்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், குறித்த கலைஞர்கள் அப்பகுதியின் சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் வெட்டு விழாவின் போது குறைந்தபட்சம் மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

தலதா பெரஹேரா மற்றும் ரன்தோணி பெரஹேரா வீதி ஊர்வலம் செல்வதை 10 நாட்களுக்குத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.