Header Ads



அறிகுறிகளற்ற கொரோனா ஆபத்தானது - நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டியது கடமை


பாகிஸ்தானில் மருத்துவ மாணவரான மகன் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதை கண்டறிய முடியாமல் மருத்துவர்களான பெற்றோர் இறுதியில் மரணத்திற்கு கையளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மகப்பேறு மருத்துவர்களில் பிரபலமானவர் ஷப்னம் தாஹிர். ஊரடங்கு காலகட்டம் என்பதால் மருத்துவ மாணவரான 21 வயது மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏன்ற சந்தேகம் ஏற்படவில்லை.

தலைவலியும் காய்ச்சலும் ஏற்பட்டதால் அவர்கள் மகனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

முதற்கட்ட பரிசோதனையில் மருத்துவ மாணவரான சல்மான் தாஹிருக்கு மூளைக்காய்ச்சல் என சந்தேகம் கொண்டு, அதற்கான சிகிச்சையில் ஏற்பட்டுள்ளனர்.

ஊரடங்கு வேளையில் சல்மான் தாஹிர் வெறும் இரண்டு முறை மட்டுமே, சொந்த வாகனத்தில் வெளியே சென்று 5 நிமிடத்தில் குடியிருப்பு திரும்பியுள்ளார்.

மருத்துவ குடும்பம் என்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஈகை திருநாள் அன்று இரவு தமது நண்பர்கள் இருவருடன் வெளியே சென்றுவிட்டு, இரண்டு மணி நேரத்தில் குடியிருப்புக்கு திரும்பி, பின்னர் குளித்துவிட்டு தூங்க சென்றுள்ளார் சல்மான்.

ஆனால் அடுத்த நாள் காலை, மகன் தூக்கத்தில் இருந்து எழ தாமதமானதால், அறைக்கு சென்று எழுப்பியுள்ளார் தாயார் ஷப்னம்.

தமக்கு தலைவலி இருப்பதாக கூறிய சல்மானுக்கு அடிப்படை மருந்து அளித்துள்ளார். இருப்பினும் மதிய உணவு நேரம் கடந்தும் தலைவலி குணமாகாத நிலையில்,

காச்சல் பரிசோதித்த மருத்துவர் ஷப்னம், சந்தேகத்தின் அடிப்படையில் மகனையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்.

முதற்கட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்ததுடன், மூளைக்காய்ச்சல் என கருதி அதற்கான சிகிச்சை அளித்துள்ளனர்.

கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இளைஞர் சல்மானுக்கு இருக்கவில்லை, இருப்பினும் சந்தேக நிவர்த்திக்காக சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

ஆனால் அதற்குள் இளைஞர் சல்மானின் உடல்நிலை மிகவும் மோசமாக தொடங்கியது. மருத்துவமனையில் சேர்ப்பித்த 12 மணி நேரத்தில் எல்லாம் தலைகீழானது.

செயற்கை சுவாசம் அளித்தும் பயனின்றி சல்மான் மரணமடைந்தார். தற்போது தமது கணவருக்கும் கொரோனா பாதிப்பு என கண்டறியப்பட்டதாக கூறும் ஷப்னம்,

அறிகுறிகளற்ற கொரோனாவும் ஆபத்தானது தான் எனவும், நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இறையடி சேரந்த சல்மானுடைய பாவங்களை மன்னித்து அன்னாரை அல்லாஹ் சுவனத்தில் சேர்த்துவைப்பானாக. இது போன்ற துக்கரமான செயல்கள் இனியும் எங்கும் நடைபெறாது இந்த மனிதர்களைப் பாதுகாப்பானாக. இதுபோன்ற நோய் அறிகுறிகள் அலலது ஏதாவது வருத்தங்கள் வருமபோது அவ்வப்போது உடனுக்குடன் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லவும் ஒவ்வொருவரும் உடனடியாகக் கவனம் எடுக்க வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்கள் உலகில் எந்த மூலைகளிலும் ஏற்படலாம். அல்லாஹ் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.