Header Ads



அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலுக்கு ஈடு இணை இல்லை

- Aashiq Ahamed -

விசித்திரத்திலும் விசித்திரம் என்ற பதம் உண்மையாக இருக்குமானால் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த ப்ளாட்டிபஸ் (platypus). இன்று பலருக்கும் நன்கு அறிமுகமாகி இருக்கும் இந்த உயிரினம், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது, மேற்குலக ஆய்வாளர்கள் நம்ப மறுத்துவிட்டனர். இப்படியான உயிரினம் இருப்பதாக கூறப்படுவது நன்கு கட்டமைக்கப்பட்ட பித்தலாட்டம் என்றே அவர்கள் எண்ணினர். அவர்களால் நம்ப முடியாததற்கு முக்கிய காரணம், ப்ளாடிபஸ்சின் உருவம். பல்வேறு உயிரினங்களில் இருந்து உறுப்புகளை எடுத்து ஒரு உயிரினமாக உருமாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ப்ளாட்டிபஸ்.

உருவம் மட்டுமில்லை, மேலும் பல்வேறு ஆச்சர்யங்களையும் தூக்கி போட்டது இந்த விலங்கு. முட்டையிடும் பாலூட்டி இனம், பாலூட்டிகளில் விஷத்தை பீச்சியடிக்கும் தன்மை கொண்ட உயிரினம் என்று ஆச்சர்யங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, மரபணுக்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் அது இன்னும் விசித்திரமான செய்தியை சொல்லின. ஊர்வனவற்றின் மரபணுக்கள், நிலநீர் வாழ் உயிரினங்களின் மரபணுக்கள் என்று எல்லாம் இதன் உடலில் கலந்துக் கட்டி இருந்தன. இவ்வளவு ஏன், பறவைகளின் மரபணுக்கள் கூட இவற்றில் உள்ளன. இது இப்படி வந்தது, அது அப்படி வந்தது என்று பரிணாமவாதிகள் அடித்து விடும் வழக்கமான எந்த கதையும் இவைகளிடம் செல்லுபடியாகவில்லை என்பது கூடுதல் காமெடி செய்தி.

இன்னுமொரு ஆச்சரியத் தகவல், இதற்கு முலைக்காம்புகள் இல்லை, வியர்வையை போல தோலில் வடியும் பாலை குட்டிகள் நக்கி சாப்பிடும்...

அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலுக்கு ஈடு இணை இல்லை...

பரிணாம வியாதிகளுக்கு மற்றுமொரு ஆப்பு...





No comments

Powered by Blogger.