Header Ads



கோத்தாபயவின் அரசாங்கத்தில் தமிழ் - முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் பிரயோகிப்பதற்கு இடமளிக்க முடியாது

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில்  தமிழ் - முஸ்லிம் அரசியல்  கட்சிகள் அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தில் பாரிய விளைவினை ஏற்படுத்தின. முரண்பாடற்ற சிறுபான்மை கட்சி உறுப்பினர்களுடன்  இணக்கமாகவே  செயற்படுவோம் .

தமிழ் மக்களின் அடிப்படை  பிரச்சினைக்கான  தீர்வு குறித்து  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு  சுதந்திர கட்சியில் 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு  நியமிக்கப்பட்டுள்ளது.

ஆகவே புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு எத்திரப்பினருக்கும் பாதிப்பு   ஏற்படாத விதத்தில் வழங்கப்படும் என  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  பொதுத்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று  -16- செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் தேசிய  கூட்டமைப்பின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது.   

அடிப்படை பிரச்சினைகளுக்கு  உண்மையாகவே  தீர்வு காண்பதற்கு  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு  எத்திரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் தீர்வு  வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.