Header Ads



இலங்கையிலும், இந்தியாவிலும் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவது குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் முஸ்லீம் சமூகத்தினர் அவர்களை கொவிட்19 உடன் தொடர்புபடுத்தும் குரோத பேச்சுக்கள் களங்கப்படுத்தல்களால் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இலங்கையிலும் இந்தியாவிலும் முஸ்லிம்கள் இனரீதியாக ஓரம் கட்டப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். தற்போது OIC நாடுகள் மாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்கூட இவ் இரு நாடுகள் விடயத்தில் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளன. முக்'கியமாக இலங்கையின் அரசியல்போக்கு எப்படியிருப்பினும் இலங்கையில் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டால் இலங்கை மாத்திரமன்றி இங்கு வாழும் முஸ்லிம்களும் அதனால் பாதிக்கப்படலாம்.
    Let alone the communal marginalization of Muslims in Sri Lanka and India. At present, the OIC countries and even the EU countries have begun to take more interest in these two countries. However, if the Muslims are oppressed in Sri Lanka, then the Muslims living in Sri Lanka may suffer from it.

    ReplyDelete
  2. இந்தியாவிலும் இலங்கையிலும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்ைககளையும் சட்டங்களையும் ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனம் அமல்நடாத்த முன்னின்று உழைக்கவேண்டும்.இதில் வல்லரசு நாடுகளின் கெடுபிடிகளுக்கு இடமளிக்கக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.