Header Ads



நிறம் முக்கிய கிடையாது, நாம் மனிதர்கள், அவர்களை மதிக்க வேண்டும்


அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் மரணம் அங்கிருக்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் தில்ஷன் முனவீரா, இது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஆதங்கமாக கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரால் அமெரிக்காவில் 46 வயதி மதிக்கத்தக்க George Floyd என்ற கருப்பினத்தவர் கொல்லப்பட்டார்.

இதனால் இனவெறி, கருப்பினத்தவர் என்றால் ஒரு பாகுபாடு, உடனடி நீதி வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இது அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இலங்கை அணியின் இளம் வீரரும், துவக்க ஆட்டக்காரருமான தில்ஷன் முனவீரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் George Floyd மரணத்தால், ஆதங்கமான கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும், நிறம் முக்கிய கிடையாது. நாம் மனிதர்கள், அவர்களை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நல்லது,ஆனால் இந்த வீரர் வாழும் நாட்டில் இருக்கும் இனவாதத்தை,அந்த இனவாதம் முன்னைய காலங்களில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்தப்பட்ட பட்ட போது இவர் ஏன் அமைதியாக இருந்தார்,குமார் சங்கக்கார போல் எங்கு வன்முறை நடந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.