Header Ads



மாணவர்களுக்கு மகாபொல வழங்க பணம் இல்லை, கடன் பெற்றேனும் நிதி வழங்க முயற்சி - பந்துல

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல  புலமைப்பரிசில் நிதி வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. எனவே கடன்களை பெற்றேனும் மாணவர்களுக்கு நிதியை வழங்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என அரசாங்கம் கூறுகின்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பல்கலைக்கழகங்களில் 60 ஆயிரம் மாணவர்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் மகாபொல புலமைப்பரிசில் நிதி உதவிகளை பெறுகின்றனர். இதனால் ஒரு மாதத்திக்கு 160 மில்லியன் ரூபாய்கள் செலவாகின்றது. இந்த நிதித்தொகையில் 51 வீத நிதியானது மகாபொல புலமைப்பரிசில் ஒதுக்கீட்டு நிதியில் வழங்கப்படுகின்றது. ஏனைய 49 வீத நிதியும் திறைசேரியின் மூலமாக வழங்கப்படுகின்றது.திறைசேரி நிதி என்பது  பொதுமக்களின் வரிகளில் சேர்க்கப்படும் பணத்தில் ஒதுக்கப்படுகின்றது.  

கடந்த மூன்று மாதங்களில் அபிவிருத்தி லொத்தர் செயற்பாட்டில் இல்லை, ஏனைய வழிகளில் திறைசேரிக்கு பணம் வரவும் இல்லை . ஆகவே அரசாங்கம் நிதி நெருக்கடியில் உள்ளோம்.  மகாபொல நிதியில் பல மோசடிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றது.

அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்  நிதி வழங்க எந்த வழிமுறையும் இல்லை. எனவே கடன்களை பெற்றேனும் இந்த நிதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றது. இருக்கின்ற நிதியை வைத்துக்கொண்டு ஏனைய நிதிக்கு கடன் பெற்றுக்கொண்டு நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதியை வழங்க அமைச்சரவையில் அனுமதியை பெற்றுள்ளோம்.   

2 comments:

  1. அதற்குப் பரவாயில்லை கழாநிதி அவர்களே, நாங்களும் எங்கள் குடும்பம் அனைவரும் சேரந்து உங்களுக்கு இரண்டு மேலதிகங்களை பெற்றுத் தர உத்தரவாதம் அளிக்கின்றோம் என சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது அந்த மூன்றில் இரண்டு உருண்டைகள் கிடைத்தால் நாட்டில் மிஞ்சியுள்ள அனைத்துக்காணிகள், கட்டடங்களையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அடகுவைத்து விற்றுவிட்டு மேலதிக சம்பாத்தியங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. You have no money for this but you can built International Cricket ground in Homagama.

    ReplyDelete

Powered by Blogger.