Header Ads



கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டோம் என கூற முடியாது. - தொற்று நோய் விஞ்ஞான பிரிவு

(இரா. செல்வராஜ்)

கொவிட்- 19 வைரஸை முழுமையாக  கட்டுப்படுத்தி விட்டோம் என கூற முடியாது.

நாட்டில் வழமை நிலை திரும்பியிருப்பதால் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால்  பொதுமக்கள் மத்தியில் இருந்து வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது என  தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவின் விசேட  வைத்திய நிபுணர் சுஹத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள்  அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் கடந்த 8 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பொது மக்கள் மத்தியில் இருந்து கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலடையக் கூடிய வாய்ப்பு உள்ளன.

நாளாந்தம் சுமார் ஆயிரம் பேருக்கு பி . சி. ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வைரஸை கட்டுப்படுத்தும் ஒரே வழி இதுவாகும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.