Header Ads



மல்கம் ரஞ்சித்தின் முயற்சிகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம்


நீதிக்கான பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் முயற்சிகளை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019 இல் உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான பேராயரின் முயற்சியை அரசியல் ஆராய்ச்சிகளிற்கு உட்படுத்தக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்தினாலின் நோக்கம் அரசியல் இல்லை மாறாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதே அவரின் நோக்கம் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஹரீன்பெர்ணான்டோவின் கருத்துக்களை தான் செவிமடுத்ததாக தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே அவ்வாறான தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கைகள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஒருதொலைபேசி அழைப்பின் மூலம் எனக்கு தகவலை வழங்கியிருந்தாலும் நான் ஆராதனைகளை நிறுத்தியிருப்பேன் இதன் காரணமாக மக்களை காப்பாற்றியிருக்க முடியும் என பேராயர் தெரிவித்திருந்தார் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இந்த குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் துயரமடைந்தார் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பேராயர் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைப்பதற்காக பாடுபடுகின்றார் ,இதன் காரணமாக கர்தினாலின் கருத்துக்களினால் எந்த கட்சி பாதிக்கப்பட்டிருக்கும் என ஆராய்வது நியாயமற்ற செயல் என ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.