Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியால், ஒருசில ஆசனங்களை மாத்திரம் வெல்லமுடியும் - நவீன்

ஐக்கிய தேசிய கட்சியினை அழிக்க முடியாது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்களை ஐக்கியதேசிய கட்சியால் மாத்திரம் எதிர்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியில் நெருக்கடிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் எனினும் கடந்த 72 வருடத்தில் கட்சியை யாராலும் அழிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் சில ஆசனங்களை வெல்ல முடியும் தேர்தலில் வெல்ல முடியாது என நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கியதேசிய கட்சியுடன் இணையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.