Header Ads



தேசத்திற்கு மகுடம் சூட்டிய, சுமந்திரனின் புதல்வன்


- Abu Zainab -

ஜேர்மன் நாட்டின்  University of Cologne யினால் ஏற்பாடு செய்யப்பட்ட Tilbury House World Schools Debate Championship எனும் சர்வதேச பாடசாலை மட்ட விவாத மேடையில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய Champion பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்த ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியகும்.

குறித்த விவாத அணிக்கு தலைவராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் குறித்த தொடரில் உலகளாவிய ரீதியில் சிறந்த விவாதப் பேச்சாளருக்கான முதலாம் நிலையையும் றோயல் கல்லூரியின் மாணவன் Shalem Sumanthiran (ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் புதல்வன்) பெற்று தேசத்திற்கு மகுடம் சூட்டியுள்ளார். இதில் தொடரில் உலகளாவிய ரீதியில் 8ஆம் நிலையை றோயல் கல்லூரியின் மாணவன் Janul De Silva பெற்று இம்மகுடத்திற்கு வலுச் சேர்த்துள்ளார்.

இந்த நிகழ்வு நமக்கும் தேச நல்லிணக்கத்திற்கும் ஏராளமான செய்திகளை முன்மொழிகிறது. ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சிறுபான்மை இனத்தில் உதித்த ஒரு தேசத்தை நேசிக்கும் நல்ல பிரஜை ஆவார். அவரும் றோயல் கல்லூரியின் பழைய மாணவர். Physics பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் சட்டக் கற்கையைக் கற்றுக் கொண்டவர். Methodist Church in Sri Lanka வின் Vice-President. சட்ட நுணுக்கத்திலுள்ள வல்லமையினால் இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

இலங்கை நாட்டை குழறுபடிக்குட்படுத்த முனைபவர் என்ற குற்றச்சாட்டு சுமந்திரன் ஐயாவுக்கு வேண்டுமென்றே பல தடவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் தவறான எந்த அடிப்படையுமற்ற விமர்சனமுமாகும்.  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சட்ட ஆட்சியை (Rule of Law) நிறுவுவதில் எப்போதும் முன் நின்று பாடுபடுபவர். நாட்டை நேசிக்கும் எந்த ஒரு பிரஜையாக இருந்தாலும் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதில் முன் நின்று உழைக்க வேண்டும். அதைத்தான் சுமந்திரன் ஐயா செய்கிறார். அவரது நேர்மையான அணுகுமுறைக்கு தவறான வியாக்கியானமும் விமர்சனமும் வழங்கப்படுவது அவர் சிறுபான்மை உரிமைக்காக பாடுபடுபவர் என்பதனாலோ என்னவோ.

எது எப்படி இருப்பினும், அவரது மகன் உலகளாவிய ரீதியில் சாம்பியனாகி பெருமை சேர்த்திருப்பது இலங்கை நாட்டிற்கேயாகும். ஏனைய சட்ட வல்லுனர்களைப் போல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சட்டத்துறைக்கான பங்களிப்பின் மூலமும் நாட்டின் சட்டவாட்சியில் ஏற்படும் மேம்பாடு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு நற்பெயரையே ஏற்படுத்தும். முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அடிப்படை மனித உரிமைகள் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் இலவசமாக உதவ முன் வந்திருப்பதும் அவரின் இன மத பேதமற்ற மனித மாண்பிற்கு சான்றாகும்.

ஆக, சுமந்திரன் எனப்படும் ஆளுமை இலங்கை தேசிய அரங்கில் முக்கிய வகிபாகமுள்ள தேசப்பற்றுள்ள கற்ற சிறந்த ஆளுமையாகும். அவரை, இன மத பேதங்கள் அற்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் புத்திரனை உருவாக்கிய ஒரு நாட்டுப்பற்றாளனாகப் பார்ப்பதே பொருத்தமானதாகும். 

5 comments:

  1. congrats shalem sunanthiran
    god bless you

    ReplyDelete
  2. "நிச்சயமாக இறைவன் நீதியாளர்களை நேசிக்கின்றான்" -புனித அல்-குர்ஆன் 49:9.

    நீதிக்காக தம் நாவுகளை வாட்கள் போன்று தீட்டிக் கொண்ட தகப்பனாருக்கும் தனயருக்கும் தாயக அணிக்கும் நம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Shalem கு இறைவனின் நேசம், முஸ்லீம் சமூகத்துக்காக பேசிய ஹிஜாஸ் ஹிஸ்புல்லக்கு அநியாயமான தண்டனை. இதை இறைவனின் சோதனை என்று சொல்வார்கள். பொறுமையாளர்களோடு இறைவன் இருக்கிறான் என்ற குரான் வசனத்தையும் எழுதி காட்டுவார்கள். அந்த பொறுமைக்கு மறுமையில் கூலி என்பார்கள்.

    இவர்களின் வியாகியனத்தின் படி இறை விசுவாசிகளுக்கு இவுலகில் வெறும் சோதனையும் வேதனையும் மட்டும்தான் என்றல், பேசாம independence square கு போய், ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டது போக வேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.