Header Ads



கடுந்தொனியிலான ஜனாதிபதியின் உத்தரவையடுத்து, அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது மத்திய வங்கி

(நா.தனுஜா)

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் நேற்று -16- மத்திய வங்கி உத்தியோகத்தர்களுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கான யோசனைகளை முன்வைக்கும் பொறுப்பு மத்திய வங்கிக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், தனது யோசனைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ முடியாவிடின், பொருத்தமான மாற்றுத்தீர்வுகளை மத்திய வங்கி விரைந்து முன்வைக்க வேண்டும் என்றும் கடுந்தொனியில் வலியுறுத்தினார்.

இதனையடுத்து நேற்று செவ்வாய்கிழமை இரவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் அனைத்து வங்கிகளுக்குமான நியதி ஒதுக்கு விகிதத்தினை மத்திய வங்கி மேலும் குறைப்புச்செய்திருக்கிறது.

அதன்படி, இலங்கையின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 ஜுன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப்பேணுகை காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதமாக 2 சதவீதத்திற்கு 200 அடிப்படைப்புள்ளிகளால் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.

No comments

Powered by Blogger.