Header Ads



"ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு, மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பு"

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சிக்கும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு கிடையாது. மத்திய வங்கி தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் மக்கள் மத்தியில் நல்வரவேற்பினை பெற்றுள்ளது. அரசியல் தேவைகளை நோக்கமாக கொண்டு செயற்பட வேண்டிய தேவை  ஜனாதிபதிக்கு   கிடையாது.  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  வழங்கிய பணிப்புரை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. ஜனாதிபதி அரச ஊழியர்களை அச்சுறுத்துவதாகவும், அழுத்தம் பிரயோகிப்பதாகவும்.  

  எதிர்கட்சியினர் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சனத்துக்குள்ளாக்கும்  உரிமை  எதிர்க்கட்சியினருக்கு கிடையாது.  மத்திய வங்கி தொடர்பில் ஜனாதிபதி செயற்பட்ட விதம்  மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளன. அமைச்சரவையின் பிரதானி என்ற அடிப்படையில் ஜனாதிபதி நிதி தொடர்பான தீர்மானங்களை எடுத்துள்ளார். இதில் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

கொவிட் -19 வரைஸ்  தாக்கத்தினால் பொருளாதார  ரீதியில் பாதிக்கபட்ட மக்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பொருளாதாரம்  துரிதமாக கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர்   முன்னேற்றமடைய வேண்டும். அதற்கு மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  ஜனாதிபதியின் தீர்மானங்களை தற்போது மத்திய வங்கி செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.

 கொவிட்-19  வரைஸ்  பரவலை  கட்டுப்படுத்த  ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கைகளை உலக நாடுகள்  வரவேற்றுள்ளன. ஆகவே தற்போது மக்கள் அரசியல் ரீதியில் தெளிவுப் பெற்றுள்ளார்கள்.  2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் தீர்மானங்களே பொதுதேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் பெறும் என்றார்.

No comments

Powered by Blogger.