Header Ads



'பூயிடா' பிடிபட்டான்

கொலை, கப்பம் கோரலுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினரான தொன் லகித ரவிஷான் ஜயதிலக எனப்படும் 'பூயிடா' என்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இதுனில் குமார என்ற பாதாள உலக குழு நபருடன் இணைந்து, குறித்த நபர் சட்டவிரோத செயற்பாடுகள் பலவற்றில்  ஈடுபட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.   

ஹங்வெல்லயிலுள்ள ரன்னல்ல பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து வாள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.