Header Ads



இப்படியும் பாடம் சொல்லி கொடுக்க முடியும்: கெத்து காட்டும் தலைமை ஆசிரியர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும், 2019-2020 கல்வியாண்டில் அனைத்து மாணர்வகளும் ஒவ்வொரு மாநில அரசுகளும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளனர்.

2020-2021 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் தற்போதுதான் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் மாதத்திற்கு முன் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை.

தனியார் பள்ளிகள் தற்போதில் இருந்து ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து வருகின்றன. இதற்கு ஒருபுறம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் கூட முறையிடப்பட்டுள்ளது. மாணவர்களும் ஸ்மார்ட் போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போன் தேவை. அதற்கு இணையதள வசதி எல்லாம் வேண்டும். மேலும் மாணவர்கள் கண்பார்வை பாதிக்க வாய்ப்புள்ளது.

இந்த நேரத்தில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் பங்கதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சுமார் 246 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லை.  இதனால் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தலாம் என்று யோசித்தார்.

அப்போதுதான் நம்மூர்களில் திருமண வீடுகளில் கட்டப்படும் ஒலிபெருக்கி அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த கிராமத்தில் அதிகமான மாணவர்கள் இருக்கும் இடங்களில் அமைந்திருக்கும் பெரிய மரத்தில் இந்த ஒலிபெருக்கியை கட்டினார். அதேபோல் மின்கம்பத்திலும் கட்டினார்.

பின்னர் பள்ளிக்கூட வகுப்பறையில் இருந்து ஆசிரியர்களை மைக் மூலம் பாடம் எடுக்கச் சொல்ல, மாணவர்கள் மரத்தின் அடியில் இருந்து பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதியில் இருந்து தினந்தோறும் இரண்டு மணி நேரம் இப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக அந்த தலைமையாசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில் ‘‘மாணவர்கள் அதிகமான இடங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி வைத்துள்ளோம். ஏழு ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து மைக் மூலம் பாடம் எடுப்பார்கள். எங்கள் பள்ளில் 246 மாணவர்கள் உள்ளனர். இதில் 204 மாணவர்களிடம் போன் கிடையாது.

தினந்தோறும் காலை 10 மணிக்கு வகுப்பு தொடங்கும். மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது ஏதாவது கேட்க விரும்பினால், அவர்களுடைய கோரிக்கையை யாராவது ஒருவர் செல்போனில் இருந்து எனக்கு அனுப்புவார்கள். அடுத்த நாள் அதற்கான விளக்கம் அளிக்கப்படும்’’ என்றார்.

இந்த பள்ளிக்கூடத்தின் திறமையை பார்த்து அந்த மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்லிவித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ITHU PONRA MOOLAISHAALIKAL,
    MOOLAI NANRAAKA VELEI SHEIYAKOODIA
    AASHIRIYARKAL, ARIVAALIKALTHAAN
    NAMMA NAATUKKUM KATTAAYA THEVEI.

    AANAAL NAMMA NAATTILA ULLA
    AASHIRIARKAL, KALVIAYI KAATTI
    VIYAPAARAM SHRITHU,
    PANAM SHAMBAATHIKKA, VALLAVARKAL.
    KETTIKKAARARKAL.

    ReplyDelete

Powered by Blogger.