Header Ads



சுவிஸில் கிலோ கணக்கிலான தங்கத்தை, ரயிலில் விட்டுச்சென்ற நபர் தேடப்படுகிறார்


சுவிட்சர்லாந்தில் ரயில் ஒன்றில் பல கிலோகிராம் தங்கத்தை விட்டுச் சென்ற மர்ம நபரை லூசெர்ன் மாகாண நிர்வாகம் தேடி வருகின்றது.

கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின் உரிமையாளர் ஐந்து ஆண்டுகளுக்குள் உரிய ஆவணங்களுடன் உரிமை கோரலாம் என இந்த விவகாரம் தொடர்பில் லூசெர்ன் மாகாண நிர்வாகம் விளம்பரம் செய்துள்ளது.

St. Gallen-ல் இருந்து லூசெர்ன் வரை செல்லும் SBB ரயில் ஒன்றில் கடந்த 2019 அக்டோபர் மாதம் சுமார் 182,000 பிராங்குகள் மதிப்பிலான தங்க கட்டிகளை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகள் இருந்தபோதிலும், உரிமையாளரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து தங்கக் கட்டிகளை லூசெர்னில் உள்ள அரசு வக்கீல் அலுவலகத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்கக் கட்டிகளுக்கு நியாயமான ஆதாரங்களுடன் அதனுரிமையாளர் ஐந்து ஆண்டுகளுக்குள் அரசு வக்கீல் அலுவலகத்தில் வலியுறுத்தலாம்.

மொத்தம் 3.8 கிலோகிராம் தங்கக் கட்டிகள் என தெரிவித்துள்ள லூசெர்ன் அரசு வக்கீல் அலுவலகம், அதன் மொத்த மதிப்பை வெளியிடவில்லை.

No comments

Powered by Blogger.