Header Ads



தனது கோடிக்கணக்கான சொத்துக்களை, யானைகள் பெயரில் எழுதிவைத்த அக்தர் இமாம்


தனது சொத்துக்களை யானைகளுக்கு எழுதி வைத்த நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பீகாரை சேர்ந்த அக்தர் இமாம் என்பவர் யானைகளுக்காக அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவர் தான் செல்லமாக வளர்க்கும் மோதி மற்றும் ராணி என்ற யானைகளுக்காக தனது சொத்தான நிலத்தை அவற்றின் பெயரில் எழுதி வைக்கிறார். இதனால், யானைகள் கோடீஸ்வரர்களாக மாறப்போகின்றன.

கடந்த சில நாட்களாக யானைகள் மீதான தாக்குதல் குறித்து சோகக் கதைகளை நாம் கேட்டு வருகின்றோம்.

இந்த நிலையில், யானையின் மீது கொண்ட அன்பால் சொத்தையே எழுதி வைக்கும் அளவுக்கு சென்றுள்ள அக்தர் இமாமின் நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த அக்தர் இமாம் யானைகளுக்காக அரசு சாரா என்.ஜி.ஓ. நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கு மோதி என்ற 15 வயது யானையும், ராணி என்ற 20 வயது யானையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனது மரணத்திற்கு பிறகு இரு யானைகளும் அனாதைகளாக ஆகி விடக்கூடாது என்று கூறியுள்ள அக்தர் இமாம், தனது நிலத்தை யானைகள் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார்.

தான் மறைந்த பின்னர் யானைகள் அனாதைகளாக நிற்க கூடாது என்கிறார் அவற்றை வளர்க்கும் அக்தர் இமாம்.

இதுகுறித்து அக்தர் இமாம் கூறுகையில், ‘மிருகங்கள் மனிதர்களைப் போல கிடையாது. அவைகள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை. நான் யானைகளை பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன். நான் மரணித்த பிறகு அவைகள் அனாதை ஆகி விடக்கூடாது. அவற்றை எனது பிள்ளைகளைப் போல கவனித்து வருகிறேன். யானைகள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது.

எனது நிலத்தை மோதி, ராணியின் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளோன். இவை சில கோடி ரூபாய் மதிப்பு உடையவை.

என்னை பலமுறை நான் வளர்த்த யானைகள் காப்பாற்றியுள்ளன என கூறியுள்ளார்.

யானைகளுக்கு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை எழுதி வைக்கும் அக்தர் இமாமுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

No comments

Powered by Blogger.