Header Ads



நீண்ட நாட்களுக்க பிறகு, வாயைத் திறந்த சந்திரிக்கா

முன்னணி சோசலிஷ கட்சி ஏற்பாடு செய்த போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ப்ளக் லயிட்ஸ்” பிரசாரத்திற்கு ஆதரவாக அமைதியான எதிர்ப்பாளர்கள் குழுவைக் குறிவைத்துக் கடந்த செவ்வாய்க்கிழமை 09 ஆம் திகதி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

இந்த அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது என அரசாங்கத்தின் கூற்று எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு ஜனநாயக அரசில், நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் எதிர்ப்பு தெரிவிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை உண்டு.

பொது உரிமைக்கு மதிப்பளிப்பது, சட்ட அமுலாக்க அதிகாரிகளின் அதாவது பொலிஸாரின் கடமையாகும். குடிமக்களின் குடியுரிமை உரிமைகளை மீறாமல் உறுதிப்படுத்தவும் பாதுகாக்கவும் அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இனம், மதம், அரசியல் சித்தாந்தம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு இலங்கையினரதும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் எமது நாட்டுக்குள் தனி மனிதனின் சுதந்திரம் மற்றும் மேலாண்மை தரம் பாதுகாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. AMMAAA!!! DIGANA KALAVARAM, UNGALUDAYA A, KAALAM, MUSLIMGAL,KOLAI SHIYAPATTU
    PORUTKAL SHOORAIYAADAPATTU,
    1000 KODI RUPAIKUMEL, NASHTA
    ETPADUTHIYAPOTHU, UNGAL VAYIL
    PUTTU POTTU, ADAITHU VAITHEENGALA?

    VELINAATTUKKAAKA PESUGUKIRA NEE
    MUSLIMGALIN UYIR, UYIRALLAYAA?

    UNGALUDAYA ARASHAANGAM,
    MUSLIMGALAI

    ReplyDelete

Powered by Blogger.