Header Ads



நீர்கொழும்பு சிறையில், ஆடம்பர வாழ்க்கை (படங்கள்)

பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அனுபவிக்கும் ஆடம்பரமான வாழ்க்கையினை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த புகைப்படங்களுக்கு அமைய சிறைச்சாலைகளுக்கு எந்த வகையிலும் கொண்டு செல்ல முடியாத மற்றும் தடை செய்யப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகள், மின் விளக்குகள்,மின் விசிறிகள், மைக்ரோ அவன்கள் சிறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணத்தை கொடுத்து தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை சிறைக்குள் வைத்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரியவந்துள்ளதை அடுத்து உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





1 comment:

Powered by Blogger.