Header Ads



மங்கள பின்வாங்கியது ஏன்..?

பௌத்தத்திற்கு எதிரானவர் என முத்திரை குத்தப்பட்ட மங்கள சமரவீர ஐக்கிய மக்கள் சக்திக்குள் தனிமைப்படுத்தப்பட்டார்- சண்டே டைம்ஸ்

ஐக்கிய மக்கள் சக்தியும் அதற்குள் ஏற்பட்டு வரும் ஆழமான பிளவுகள் காரணமாக நெருக்கடியை சந்தித்து வருகின்றது.

ஆளுமையுள்ள ஒரு நபரான மங்கள சமரவீர தான் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்கின்றேன் என அறிவித்ததை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்திக்குள் காணப்படும் விவகாரங்கள் குறித்;த விடயங்கள் வெளியே தெரியவந்துள்ளன.

தேர்தலில் தோல்வியடைவார் என்பதை நன்கு அறிந்ததன் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்தார் என அவரது எதிராளிகள் உடனடியாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னர் போன்று மங்களசமரவீர தனது தேர்தல் தொகுதிக்கு விஜயம் மேற்கொள்வதில்லை அவரது வழமையான வாக்காளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர் என்பதை அடிப்படையாக வைத்து அவர் தோல்வியடைவார் என அவரது எதிராளிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் நிதியமைச்சராக பதவி வகித்தமை அவர் தனது தேர்தல் தொகுதிக்கு விஜயம் மேற்கொள்வதை கடினமானதாக்கியது.

மேலும் அவர் கடந்த பல மாதங்களாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளமையும் அவரது ஆதரவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருட ஆரம்பத்தில் இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை என்ற அவரின் கருத்துடனேயே அது ஆரம்பமானது.

இது பௌத்த மததலைவர்களை கடுமையான சீற்றத்திற்குள்ளாக்கியிருந்தது.

சமீபத்தில் மீண்டும் அவர்களை விமர்சனம் செய்ததன் மூலம் மங்களசமரவீர அவர்களின் சீற்றத்தினை எதிர்கொண்டார்.

புத்தரின் காலத்தில் கூட அவரை எதிர்த்தவர்கள் காணப்பட்டனர் என தெரிவித்து மங்கள சமரவீர தன்னை நியாயப்படுத்தினார்.

அவரது முன்னாள் அமைச்சரவை சகாவான லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக அவரை பகிரங்கமாக கண்டித்ததுடன் மங்கள சமரவீர ஐக்கிய மக்கள் சக்திக்கு சுமையாகின்றார் என தெரிவித்தார்.

முன்னர் மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமானவராக காணப்பட்ட தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ள ஒருவரும் இதே கருத்தினை வெளியிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மங்களசமரவீரவிற்கு உருவாகியுள்ளது.அவரை பௌத்தத்திற்கு எதிரான என குறிப்பிடுகின்றனர்.

இன்னொரு வெளியில் தெரியவராத விடயமும் உள்ளது.

அது மங்களசமரவீரவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சமீபத்தைய சந்திப்பு.

இந்த சந்திப்பு சில வேளைகளில் சூடானதாகவும் சில வேளைகளில் அமைதியானதாகவும் காணப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் இடம்பெற்ற விடயங்கள் குறித்து மங்களசமரவீர சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடு செய்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கியதேசிய கட்சியின் கொள்கைகளில் இருந்து விலகி வேகமாக தேசியவாத குழுவாக மாறிவருகின்றது என மங்களசமரவீர குற்றம்சாட்டியிருந்தார்.

எவராவது அந்த குழுவில் இடம்பெறவிரும்பியிருந்தால் அவர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனும் அவரது குடும்பத்தினருடனும் இணைந்திருப்பார்கள் என மங்களசமரவீர சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் பின்னால் செல்லவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர பல மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மங்களசமரவீர சுமையாக மாறிவிட்டார் அவரால் ஐக்கிய மக்கள் சக்திக்கு சிங்கள பௌத்த வாக்குகள் கிடைக்காது என சஜித் பிரேமதாச கருதுகின்றார்.

மங்களசமரவீரவை பொறுத்தவரை இது மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக காணப்படுகின்றது.

மலிக் சமரவீரவுடன் இணைந்து ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் மங்களசமரவீர.

ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்திற்கும் காரணமானவர் மங்களசமரவீர.

அவர்களிற்கு ரணில்விக்கிரமசிங்கவினால் அரசியலில் வளர்க்கப்பட்ட குழுவினர் ஆதரவளித்தனர், அதன் பின்னர் அவருக்கு எதிரான துரோகிகளாக மாறினர்.

Rajeevan Arasaratnam

No comments

Powered by Blogger.