Header Ads



8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி - ஆபத்தான கட்டத்துடன் தண்ணீர், உணவுகளை உண்டு வருகிறது


வவுனியாவில் எட்டுக்கால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று  நேற்றையதினம் -27- இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெடுங்கேணி நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும் மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி ஒன்று  நேற்றைய தினம் 3 மணியளவில் பிறந்துள்ளது.

நைனாமடுப்பகுதியில் சீதாகோபால்  ஆறுமுகம் எனும் அரசியல் கைதி ஒருவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இவரது குடும்பம்   2017 ஆம் ஆண்டில் இருந்து வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். இதில் ஒரு ஆடுதான் அதிசய குட்டியினை ஈன்ற ஆடு. இவ் ஆடு கடந்த ஆண்டு இரண்டு ஆட்டுக்குட்டிகளை இறந்த நிலையிலையே ஈன்றுள்ளது. பின்னர் நேற்றையதினம் இந்த ஆடு  3 மணியளவில் அதிசய ஆட்டு குட்டி ஒன்றினை ஈன்றுள்ளது.

அதிசய ஆட்டுக்குட்டி வழக்கமான முறையில் நான்கு கால்களை கொண்டிருந்தாலும் அதிகமாக மூன்று உடலையும் நான்கு கால்களையும்  கொண்டு ஒரு தலையுடன் பிறந்தது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

இவ் ஆட்டுக்குட்டியின் உடல்நிலை ஆரம்பத்தில் சீராக காணப்பட்டாலும் இன்று ஆபத்தான ஒருகட்டத்திலே இருக்கின்றது. ஆயினும் இந்த ஆட்டுகுட்டி தற்பொழுது தண்ணீர், உணவுகளை உண்பதாகவும் சீதகோபால் ஆறுமுகம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இலங்கையில் இப்படி ஒரு அதிசயம் முதன்முதலாக இடம்பெற்றுள்ளது என இத் தகவல் பரவியதை அடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் எட்டுகால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.


No comments

Powered by Blogger.