Header Ads



புதியவர்களுக்கு இடமளியுங்கள் - 75 ஆவது பிறந்த தினத்தில் சந்திரிக்க கோரிக்கை


தற்போது அரசியல் தலைமைத்துவத்தில் இருக்கும் அனைவரும் ஓய்வுபெற்று, புதியவர்கள் பதவிக்கு வருவதற்கு இடமளித்தால், நாட்டை கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது 75 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஹொரவப்பொத்தனை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ என்னை பலவந்தமாக அரசியலுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வந்து 5 வருடங்களுக்கு இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எனக் கூறிக்கொண்டு நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் பெரும்பான்மையானவர்கள் இந்த நாட்டை கட்டியெழுப்ப மாட்டார்கள் என்பதை புரிந்துக்கொண்டேன். இவர்களில் ஒருவராலும் முடியாது. தான் வளர்வதற்காக கொள்ளையடிக்கும் நோக்கிலேயே பலர் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இப்படியானவர்களுடன் அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை. எனக்கு பேராசையில்லை. ஜனாதிபதியாக பதவி வகித்து வீட்டுக்குச் சென்ற பின்னர், மீண்டும் பிரதமராக பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இல்லை. சர்வாதிகாரங்களை கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகும் தேவை எனக்கில்லை.

தற்போது அரசியலில் இருக்கும் தலைவர்கள் நடக்க முடியாது உடல் நல குறைவுடன் அரசியலில் ஈடுபடுவதை விட ஓய்வுபெற்று வீட்டுக்கு சென்று, புதியவர்களுக்கு இடமளித்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நான் நினைக்கிக்றேன்” என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. PAAVAM, VAYATHUMUTHIRNDA KAALATHIL,IRAVU THOONGAVILLAI ENRAAL, VAAIKU
    VANDATHAI ELLAAM ULARUVATHU, SHAKAJAM.
    AMMAIYAAREI, EPPADIYAAVATHU, KONJAM
    THOONGI ELUMBURATHUKKURIA VALIYAI
    THEDUNGAL..

    ReplyDelete
  2. கண்பார்வை குறைபாடுடையவரகள் செவிப்புலக் குறைபாடு உடையவரகள் மூட்டு வலியினால் சரியான முறையில் நட்க்கமுடியாது அவதிப்படுவோர். வயது முதிர்ச்சி காரணமாக அரசாங்கமே வீட்டுக்கு அனுப்பிய ஓய்வு பெற்ற முதியவரகள். எப்பொழுதும் மருந்து மாத்திரைகளில் காலம் கடத்திக் கொண்டிருப்பவரகள். தொழில் இல்லாமை காரணமாக அரசியலுக்கு வந்த முதியவரகள். தகப்பன், தகப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் அவரது மகன். 75 80 வயது கட்ந்தும் அரசியலை விடாப்பிடியாக அழுங்குப் பிடி பிடித்துக் கொண்டிருக்கும் வயதானோர் இல்லத்தில் இருக்க வேண்டிய முதியவரகள். குடும்ப வாரிசுகள். எமது இலஙகை பொருளாதார ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, அல்லது சமூக ரீதியாகவும் சரி பிற்போக்குத்தனமான நிலைமைக்குச் செல்லக் காரணங்களே இவைகள்தான். சந்திரிக்கா அம்மையார் அவரகள் பிரான்சில் கல்வி கற்றமையின காரணமாகவும் நியாயமான காலம் வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் பற்றிய அறிவினைக் கொண்டிருப்பதன் காரணத்தாலும் நாட்டின் நிலைiமைபற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளார். ஆயினும் அடிப்படையில் அரசியல் பயிற்சி மக்களுக்கு வழங்கப்படாவிட்டால் இப்படியான பெரும் குறைபாடுகள் இலங்கை அரசியல் போக்கில் தொடர்ந்து ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.

    People with visual impairments who do not have hearing impairments suffer from joint pain. Retired seniors sent home due to old age. Always smugglers on prescription pills. Elderly people who came into politics due to unemployment. Father, son after father, son after son. Older persons who are in the house of an elderly person who is 75 to 80 years of age and who has been relentless in politics. Family heirs. These are the reasons that make our country economically, politically, or socially reactionary. Madam Chandrika is very concerned about the state of the country because of her wide education in France and her knowledge of foreign and domestic politics for a reasonable period of time. However, unless such basic training is provided to the masses, these major shortcomings will become inevitable in the course of Sri Lankan politics.

    ReplyDelete

Powered by Blogger.