Header Ads



தந்தைக்கு நிகழ்ந்த அவலத்தை 6 வயது மகளிற்கு தெரிவிக்க முடியாமல் தடுமாறினேன் - ஜோர்ஜ் மனைவி

மெரிக்காவில் வெள்ளையின காவல்துறை உத்தியோகத்தரால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் புளொயிட்டின் மனைவி புளொயிட்டின் கொலைக்கு நீதி கோருவதாக தெரிவித்துள்ளார்.

புளொயிட் நல்ல மனிதர் நல்ல தந்தை அவர் வெறுமனே ஒரு போராட்டத்திற்கான அழைப்பு மாத்திரமில்லை என ரொக்சி வோசிங்டன் தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரிகள் என்னிடமிருந்து எவ்வளவு பெறுமதியான விடயத்தை பறித்துள்ளனர் என்பதை நான் உலகம் அறியவேண்டும் என விரும்புகின்றேன் என ரொக்சிவோசிங்டன் தெரிவித்துள்ளார்.

எனது கியன்னாவிற்கு தந்தையில்லை,எனது மகள் வளர்ந்து பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதை அவர் பார்க்கப்போவதில்லை,மகளுடன சேர்ந்து அவர் இனிமேல் நடக்கப்போவதில்லை,என தெரிவித்துள்ள அவர் மகளிற்கு ஏதாவது பிரச்சினையென்றால் தந்தை தேவை ஆனால் இனி எனது மகளிற்கு அந்த துணையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் நல்லவர் என்பதால் நான் நீதி கோருகின்றேன்,ஏனையவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது எனக்கு முக்கியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முதலில் அறிந்ததும் மகளிற்கு எப்படி தெரிவிப்பது என தெரியாமல் தடுமாறினேன், மகள் ஏன் அனைவரும் அப்பாவின் பெயரை தெரிவிக்கின்றனர் என கேட்டாள் அதன் பின்னர் நான் உண்மையை தெரிவிக்க விரும்பினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையால் சுவாசிக்க முடியவில்லை என மாத்திரம் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.