Header Ads



கொழும்பு + கம்பஹா தவிர அனைத்து பள்ளிவாசல்களும் திறக்கப்படுகிறது - 5 பேருக்கே அனுமதி


சுகாதார அமைச்சு வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த முழு நாட்டிலும் உள்ள பள்ளிவாசல்கள் திறக்கப்படும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்றி அலி தெரிவித்தார். 

சுகாதார அமைச்சின் வழிகாட்டலின்படி தயாரிக்கப்பட்டுள்ள 10 வழிகாட்டல்கள்; உள்ளடங்கிய புதிய வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வக்பு சபையின் தீர்மானத்தை முஸ்லிம் சமய கலாசாரப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம் அஷ்ரபும் உறுதிப்படுத்தினார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும, திறக்கப்படும் பள்ளிவாசல்கள் குறிப்பிட்ட தொழுகைக்கு 15 நிமிடத்துக்கு முன் திறக்கப்பட்டு 45 நிமிடத்துக்குள் மூடப்பட வேண்டும், கூட்டுத் தொழுகை நடாத்த அனுமதிக்கப்பட மாட்டாது. பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் 5 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

பள்ளிவாசலில் ஒரு நுழைவாயில் மட்டுமே திறந்து வைக்கப்பட வேண்டும், பள்ளிவாசலில் மலசலகூடம், ஹவ்ல் என்பன பூட்டி வைக்கப்பட வேண்டும், காபட்டில் தொழுகை நடாத்தக் கூடாது, ஒரு மீற்றர் இடைவெளியைப் காட்டும் அடையாளங்கள் பள்ளிவாசலில் இடப்பட வேண்டும், சகலரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், தொழுகைக்காக வருவோர் முஸ ல்லாக்களை எடுத்து வர வேண்டும், பள்ளிவாசல்களில் கூட்டங்களை நடாத்துவதற்கோ, அன்னதானங்களை நடாத்துவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டாது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை உள்ளடக்கி வக்பு சபை தயாரித்திருக்கின்ற 10 நிபந்தனைகள் கொண்ட புதிய சுற்று நிரூபம் இன்று வெளியிடப்படும் என்றும் சப்றி அலி தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை ஜூம்ஆ தொழுகை நடாத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

நவமணி

3 comments:

  1. இந்த நிபந்தனைகளை உருவாக்குவதை விட இது மூடப்பட்டிருப்பது நல்லது

    ReplyDelete
  2. Contradicting...

    While public transportations are allowed to carry passengers as per sheet numbers and spend 30 minutes to hours in a small cubical siting next to each other on sheets..

    While marriage ceramanies are allowed with 100 participant in a hall... so on..

    Suppermarkets are allowed with 100ds of customers insider for around 1 hours shopping time.


    What is the problem in permitting worshipping places, practicing 2 meter space distance for 5 minutes and leave the place..

    Authorities should consider and compare the situation..

    Let the people practice their most important part of life (practicing religion).. while you allow worldly events which are more viable for infection than worshipping places.

    No question... No masjid is going to make jamaath only with 5 and leaving the rest in 100ds out side.

    Please refer how the world is managing worshippers in masjids around the world.. then you will find it is more safer than our public transportation.... so advice the authority to allow people to get closer to GOD and make prayers.

    ReplyDelete
  3. பள்ளி வாசல் போவதே கூட்டு தொழுகைக்கு தான். தனியாக தொழுவதென்றால் வீட்டுலயே தொழலாமே . 5 பேர் எதுக்கு ? சுத்தம் செய்யவா ? இதுக்கு மூடியே வைக்கலாமே . வக்பு சபையின் தலைவர் . சிரிப்பு தான் வருது 

    ReplyDelete

Powered by Blogger.