Header Ads



கண்டியிலிருந்து 4 முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யலாம் - முத்தலிப்

இம்முறை கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள்; காலம் காலமாக நேசிக்கும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இரு முஸ்லிம் பாராமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது மிகவும் உறுதியானதாகும். அதேவேளையில் நிச்சயமாக ஐக்கிய மக்கள் சக்தியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சந்தேகமுமில்லை.  இந்த விடயம் தொடர்பில் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தங்களுடைய வாக்குகளைச் சிதறடித்து விடாமல் நன்கு சிந்தித்து வாக்குகளை சரியான முறையில் வழங்குதல் அவசியமாகும் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி  வேட்பாளருமான எம். டி. எம். முத்தலிப் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் உத்தியோகபூவமாக தேர்தல் பிரச்சார முன்னெடுக்கும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி  மாவட்ட அமைப்பாளர் சாந்தினி கோங்காகே தலைமையில் இடம்பெற்றது அந்நிகழ்வில் உரையாற்றிய கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி  வேட்பாளர் எம். டி. எம். முத்தலிப் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் ,

உண்மையிலேயே கண்டி மாவட்த்தில் எமது முஸ்லிம் வாக்கு விகிதத்திற்கு ஏற்ப நான்கு முஸ்லிம் பாரளுமன்ற பிரதிநித்துவங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். கடந்த 2010 ஆம் ஆண்டில் நான்கு முஸ்லிம் பிரதிநித்துவங்கள் இருந்தன. அது 2015 இரண்டாகக் குறைந்துள்ளது. முஸ்லிம்களுடைய மொத்த வாக்கு விகிதத்தில் 30 அல்லது 35 விகிதமான ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்தால்; போதுமானதாகும். இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மிக இலகுவான முறையில் நாங்கள்  பெற்றுக் கொள்ள முடியும். இது ஒரு அரிய சந்தர்ப்பமாகும். ஒரு குடும்பத்தில் எல்லா வாக்குகளையும் ஒரே கட்சிக்குப்  வழங்காமல் மிக இலவாகுன முறையில் வெற்றிபெறப் போகும் வேட்பாளர்களுக்கு தங்களுடைய பொன்னான வாக்குகளை சிந்தித்துப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர்தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தோல்வியுற்றார் என்று யாரும் நினைக்க வேண்டாம்.  சின்னப் பிள்ளைகள் விளையாட்டுக்காக ஐஸ் கிரீம் வாங்குவதற்காக சண்டை பிடித்து பறித்தெடுப்பதைப் போன்று  அவர் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பறித்தெடுத்தார். அவர் முன் வைத்த  தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியுற்றதே ஒழிய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தோல்லி அடைய வில்லை. அது மட்டு மல்லாமல் அந்தக் கட்சிக்கு ஒரு கொடியையோ அல்லது அதற்குகான நிறத்தையோ தெரிவு செய்வதற்கான தலைவராக இருப்பது கவலைக்குரிய செய்தியாகும். அவர் தெரிவு செய்துள்ள கொடியின் நிறத்தைப் பார்த்தால் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடியின் கீழ் நிற்கின்றார். இவர் யாருடைய திட்டத்தை அமுல்படுத்தப் போகிறார் என்பது மிகவும் கேள்விக் குறியாக இருக்கும் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. UNP was defeated due to weak leadership of Ranil who is having political deal with ruling family. Kandy district Muslim voters must think twice for this type of politicians who has come to spilt the votes.

    ReplyDelete
  2. இது முஸ்லிம்களின் வாக்குகளை சிதைக்கும் ஒரு மொக்கு தனமான கருத்து

    ReplyDelete

Powered by Blogger.