Header Ads



கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்: சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை


(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல பாதாள உலகத் தலைவனாக கருதப்படும் கஞ்சிபானை இம்ரான் என அறியப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானின் தந்தை மீது  கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் மாளிகாவத்தை பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது. 

கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரங்சலா டி சில்வா இதற்கான அனுமதியை இன்று வழங்கினார்.


நேற்றையதினம் மாலை 6.30 மணியளவில், மாளிகாவத்தை, சத்தர்ம மாவத்தை அருகே முச்சக்கர வண்டியில் வந்த மூவரால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் படுகாயமடைந்துள்ள 65 வயதான, கஞ்சிபானை இம்ரானின் தந்தை  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 காயமடைந்த குறித்த நபரின் உடல் முழுதும் வெட்டுக் காயங்கள் உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறித்த தாக்குதலை நடாத்த மூவர் முச்சக்கர வண்டியில் வந்துள்ளதுடன், சம்பவத்தை நேரில் கண்டுள்ள அருகில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்,  முச்சக்கர வண்டியுடன் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

 சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

1 comment:

  1. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு தோட்ட காட்டானுங்களும் உண்டு ஏன் அவர்கள் பெயரை போடவில்லை?

    ReplyDelete

Powered by Blogger.