Header Ads



எமக்கு சரியான பசி, விகாராதிபதிக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டோம் - 3 அமைச்சர்களுக்கு ஏற்பட்ட நிலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்த வகையிலும் மக்களின் பணத்தை விரயமாக்காத வித்தியாசமான தலைவர் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மக்களின் பணத்தில் ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில்லை. மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்று தனது மனைவியுடன் மதிய உணவை சாப்பிடுவார்.

பின்னர் அங்கிருந்து மூன்று மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து, இரவு 10 மணி வரை பணியாற்றுவார்.

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுக்கான வாகனங்களை குறைத்துக் கொண்டுள்ளார்.

அண்மையில் கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பிற்பகல் இரண்டு மணி இருக்கும் எமக்கு சரியான பசி. உணவை பெற்றுக்கொள்ள இடமில்லை. கொரோனா காரணமாக ஹோட்டல்கள் கூட மூடப்பட்டிருந்தன.

இதனையடுத்து நானும் அமைச்சர்கள் பந்துல குணவர்தன, டளஸ் அழகப்பெரும ஆகியோர் கொழும்பு கங்காரம விகாரைக்கு சென்று அங்கு விகாராதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த அன்னதானத்தில் ஒரு பகுதியை பெற்று சாப்பிட்டோம் எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.