Header Ads



சர்வதேச நிதி அமைப்புகள், வழங்கிய கடனை மீள வசூலிப்பதை 2 வருடங்களிற்கு நிறுத்தவேண்டும் - பிரதமர் வேண்டுகோள்

மூன்றாம் உலக நாடுகளிற்கு சர்வதேச நிதியமைப்புகள் கடன் நிவாரணம் வழங்கவேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடன்தொகையை வசூலிப்பதை இரண்டு வருடங்களிற்கு நிறுத்திவைத்தால் போதும் இந்த நாடுகள் மீண்டும் முன்னைய நிலைமைக்கு திரும்பிவிடும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் பலவீனப்படுவதையும்,ஸ்திரதன்மையை பேணுவதும்,நாடு கூடிய விரைவில் சுமூகநிலைக்கு திரும்புவதை உறுதி செய்வதுமே முக்கியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக எங்கள் பொருளாதாரத்தின் பல துறைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன,இதன்காரணமாக இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது,என தெரிவித்துள்ள பிரதமர் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையினருக்கு ஆதரவளிப்பதற்கு,நெருக்கடிக்கு பின்னர் உடனடி வளர்ச்சியை உறுதிசெய்வதற்கான திட்டம் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் உலக வங்கி போன்றன கடனை மீளவசூலிப்பதை இரண்டு வருடங்களிற்கு நிறுத்திவைத்தால் மூன்றாம் உலக நாடுகளால் சிறுவர்களிற்கும் பலவீனமான நிலையில் உள்ள மக்களுக்கும்,அவசியமாக உள்ள நன்மைகளை இரண்டு வருடங்களிற்கு வழங்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் சர்வதேச சமூகம் இவ்வாறான நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.