Header Ads



295 கிலோ பீடிகளுடன், இருவர் கைது

வடக்கு கடற்பரப்பில் 295 கிலோ கிராம் பீடிகளுடன், இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில், கடற்படையினர் வழமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறானதொரு தேடுதல் நடவடிக்கையை வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்டிருந்த வேளையில், சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று அவதானிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  அதில் 06 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 295 கிலோகிராம் பீடி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு,  சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33, 37 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள பீடி மற்றும் டிங்கி படகுடன் சந்தேகநபர்களை, மேலதிக நடவடிக்கைகளுக்காக சங்கானை கலால் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


1 comment:

  1. இவர்கள்தான்இலங்கைக்குள் போதைப்பொருள் மற்றும் ஆபத்தான பொருட்களை இலங்கை கடத்தி வருபவர்கள் இவர்களின் பின்னணியில் உள்ளவர்களை ஆராய வேண்டும் இவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் சென்று கடல்மார்க்கமாக சகல தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்கள்

    ReplyDelete

Powered by Blogger.