Header Ads



24 வருடங்களாக Mp ஆக இருந்த ரணில், மத்திய கொழும்புக்கு செய்தது என்ன..?

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 24 வருடமாக கொழும்பு மத்தி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவருடைய பெயரை நிலை நாட்டி ஏதும் அபிவிருத்தி வேலைகள் செய்துள்ளாரா? என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கலந்துரையாடல் கூட்டமொன்று கிரேன்பாஸ் அவல்ஸாவியாவிலே நடைபெற்ற போதே அவர் இக் கேள்வியை எழுப்பினார்.

கடந்த 4 1/2 வருட காலமாக நான் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன்.

இளைஞர், யுவதிகளுக்கு துறைமுகத்தில், அரச அச்சகத்தில், கல்வி அமைச்சில் வேலை வாய்ப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

கொழும்பு மாவட்டத்தில் 23 தேசிய பாடசாலைகள் இருக்கின்றன. பாடசாலைகளில் நிலவிய சிற்றூழியர் வெற்றிடங்களில் கூட, அகில விராஜ் காரியவசம் தனது தொகுதி ஆட்களைக் கொண்டே நிரப்பினார்.

இது பற்றி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

24 வருடம் இப்பிரதேச எம்.பி.யாக இருந்த அவர், எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் செய்யவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸ பல வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி, கொழும்பு மத்தியிலே அவருடைய பெயரை நிலை நாட்டி இருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்கவால் அவ்வாறு செய்யப்பட்டுள்ளதா? என்றும் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

3 comments:

  1. கொழும்பு முஸ்லிம்கள் அரசியல்வாதிகளிடம் எந்த நிபந்தனைகளும் இன்றி வாக்களித்து வருகின்றார்கள் .தற்போது எதிர்வரும் தேர்தலில் கொழும்பு முஸ்லிம்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் வரையப்பட்டு அதனை செயட்படுத்தி தருவதாக கூறும் அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் செய்து இந்த ஒப்பந்த அடிப்படையிலேயே கொழும்பு முஸ்லிம்கள் இனிமேல் வாக்களிக்க வேண்டும் .

    ReplyDelete
  2. O O IPPATHAN VILANGUTHO😁

    ReplyDelete
  3. VETKAM KETTAVAN, PESHUM PECHU ITHU.
    RANILIN SHENRA PIRANDANAALAIKOODA
    PALLIYIL, VIMARSHAIYAKA, KONDAADIYA, VETKAM KETTA,
    MUJIBUR RAHMAN.

    ReplyDelete

Powered by Blogger.