Header Ads



கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

(செ.தேன்மொழி)

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. 

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயணைக்கும் பணிகளை முன்னெடுத்தனர். 

இதன்போது கண்டி மற்றும் மாவனெல்ல தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில் சுமார் 4 மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீப்பரவலின் காரணமாக வர்த்தக மத்திய நிலையத்தில் சுமார் 200 வர்த்தக நிலையங்கள் வரை முற்றுமுழுதாக தீக்கிரையாகியிருந்தன. 

மின் கசிவின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என கேகாலை பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். 

இதனால் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததுடன் தீயணைப்பு படையினருடன் இணைந்து பொலிஸாரும் பிரதேச வாசிகளும் தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கேகாலை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1 comment:

  1. மிகவும் துக்ககரமான சம்பவம். அல்லாஹ்வின் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமையை மீண்டும் முயற்சி செய்து முன்னேற பாடுபடவேண்டும். இதன் நஷ்டஈடுகளை அரசும் வழங்க வேண்டும். வியாபாரிகளின் இழப்பை அரசின் ஈடுபாடு இன்றி தாங்கமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.