Header Ads



மக்களை ஏமாற்றிய உணவக உரிமையாளர்களுக்கு 1,446 ஆண்டு சிறைத் தண்டனை

மக்களை ஏமாற்றிய குற்றத்திற்காக உணவுக் கடைக்காரர்கள் இருவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் ஒன்று 1,446 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு தாய்லந்தில் லெம்ப்கேட் என்ற கடலுணவு உணவகம் இணையத்தில் முன்கூட்டியே பணத்தைப் பெற்றுக்கொண்டு உணவுக்குச் சலுகைகள் தருவதாக அறிவித்தது. அதை நம்பி 20,000 க்கும் அதிகமானோர் சுமார் 1.6 மில்லியன் டொலருக்கு இணையான பற்றுச்சீட்டுகளை வாங்கினர்.

ஆனால் அந்த உணவகம் போதிய மூலப்பொருட்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி கடையை மூடியது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமானோர் கடை உரிமையாளர்கள் இருவரின் மீதும் பொலிஸில் புகார் கொடுத்தனர்.

கடை உரிமையாளர்கள் இருவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது 723 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, இறுதியில் 1,446 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும் அவர்கள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருப்பர்.

தாய்லந்தில் 2017 ஆம் ஆண்டு மோசடிக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஆடவருக்கு 13,000 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.