Header Ads



எமது மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு அப்பால், 125 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்


12 வது இஸ்லாமிய நிதி மற்றும் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி அர்துகானின் உரையிலிருந்து சில கருத்துக்கள்:

சர்வதேச அளவில் பொருளாதரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான திறவுகோலை இஸ்லாமிய பொருளாதார முறைமை வழங்குகின்றது.

நிதித் துறையில் ஆரம்பித்த நெருக்கடி புதிய வேலைவாய்ப்பற்ற படை ஒன்றையே உருவாக்கி வருகிறது.

உலகளவில் 440,000 பேர் இந்த கொவிட்-19 தொற்றினால் இறந்துள்ளனர்.இதற்கு கொவிட்-19 மட்டும் தனியாக காரணம் காட்ட முடியாது. ஏனேனில், உலகளவில் பல நாடுகளின் பொருளாதர முறைமை செல்வந்தர்களை மட்டுமே பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

சில நாடுகளில் மக்கள் மருத்துவ காப்பீடு (Health Insurance) இல்லாமையினால் இறந்துள்ளனர்.

அன்மைக் காலமாக, சில மேற்கத்திய நாடுகளின் வீதி நிகழ்வுகளுக்குப் பின்னால் இனவாதத்துடன் சேர்த்து பல அநீதிகளும் இந்த தொற்று நோயால் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மிக பலமான! நாடுகளுக்குக் கூட தமது மக்களுக்கு Masks மற்றும் ஆகக் குறைந்த மருத்துவ உதவி வழங்குவதில் கஷ்ட்டங்கள் இருக்கின்றன.

கடன் மதிப்பீட்டு நிறுவனம் Moody இன் அறிக்கையின் படி 10 வருடங்களுக்குள் துருக்கியின் இஸ்லாமிய வங்கி சொத்துக்கள் இரட்டிப்பாகியுள்ளன.....participation banking மற்றும் இஸ்லாமிய நிதியியல் என்பற்றின் மையமாக துருக்கி தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

இஸ்தான்பூல் நகரை இஸ்லாமிய நிதி மற்றும் பொருளாதாரத்தின் மத்திய தலமாக ஆக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்.

எமது மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு அப்பால் நாம் 125 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்.

-ஸைபுல்லாஹ்-

1 comment:

  1. '(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.'
    (அல்குர்ஆன் : 30:39)
    www.jaffnamuslim.com

    ReplyDelete

Powered by Blogger.