Header Ads



120 வருடங்களாக காணி உறுதியை கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு, காணியில் உட்புக 2 வருடத்தடை - மாவனெல்லை நீதிமன்றம் உத்தரவு


-நவமணி -

மாவனெல்லை தெவனகலையில் 120 வருடங்களுக்கு மேல் காணி உறுதியை வைத்துள்ள பிரதேச முஸ்லிம்களுக்குரிய காணியில் அத்துமீறிப் 02 பிரவேசித்து பெறுமதி மிகு மரங்களை வெட்டி, வேலியை இட்டு புத்தர் சிலையை வைத்தது தொடர்பாக மாவனெல்லைப் பொலிஸார் தாக்கல் செய்திருந்த வழக்கில் தீர்ப்பளித்த மாவனெல்லை மஜிஸ்திரேட் நீதவான் தெவனிகலை விஹாரை அதிபதி உட்பட காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து உத்தரவு வழங்கினார்.

சுமார் 4 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற இந்த அத்துமீறல் குறித்து அன்வர் ராஸிக் ஆகியோர் பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டை அடுத்தே மானெல்லைப் பொலிஸார் இந்த வழக்கினை மாவனெல்லை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதவான் இரு வருடங்களுக்கு இந்த காணிக்குள் இரு தரப்பினரும் பிரவேசிப்பதற்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.