Header Ads



ஜும்ஆ, கூட்டுத் தொழுகைகளில் 100 பேர் பங்கேற்கலாம் - சுகாதார அமைச்சு

ஐவேளை ஜமாஅத் உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆகியவற்றில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன விடுத்த வேண்டுகோள்களையடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர்களுள் ஒருவரான விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா 22 ஆம் திகதியிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஆட்களிடையே 1 மீற்றர் இடைவெளி பேணி ஒரே நேரத்தில் 50 பேர் கூட்டுத் தொழுகைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli 

2 comments:

  1. மக்களைத் திருத்தும் வேலைக்கு 100 பேர்
    திருமணத்தித்துக்கு 200 பேர் என்பதினால்
    அரசு  இன்னும்  திருந்த  வேண்டி  உள்ளது.

    ReplyDelete
  2. BUT FOR POLITICAL MEETING ALLOVABLE NO. OF PERSONS 500

    ReplyDelete

Powered by Blogger.