Header Ads



ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலும் UNP யுடன் இணையாது, ரணில் என்ற மாலையை அணிவது அதிருப்தியை சம்பாதிக்கும்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக பல காரணங்கள் அடிப்படையாக இருந்ததாகவும் மீண்டும் ரணில் விக்ரமசிங்க என்ற மாலையை கழுத்தில் அணிந்துக்கொண்டு மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் அவசியம் இல்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியல் பயணம் ஒன்றை மேற்கொள்ள முடியாது உட்பட பல காரணங்களின் அடிப்படையிலேயே நாங்கள் அந்த கட்சியில் இருந்து விலகினோம்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எந்த வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாது. ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மீண்டும் இணைவதற்காகவே எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் துடைப்பட்டு செல்வதற்கோ, மீண்டும் ஆட்சி வர சந்தர்ப்பம் கிடைத்து அந்த அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமைக்கு செல்லவோ அல்லது தோல்வியான அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் அவசியமோ இல்லை.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் செல்லும் பயணத்தை அவர் தனியாக செல்வார். அவருடன் இணைய இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு எந்த தேவையும் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் நாங்கள் எங்களது அரசியல் பயணத்தை மேற்கொள்வோம். மக்களும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் எங்களுடனேயே இருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கைது அரசியல் பழிவாங்கல். ராஜித கைது செய்யப்பட்டமைக்கு அடிப்படையாக அமைந்த சம்பவம் நாட்டில் எவருக்கும் முக்கியமான ஒன்றல்ல. அத்துடன் அந்த பிரச்சினையாது நாட்டின் எதிர்காலத்திற்கோ தற்காலத்திற்கோ முக்கியமான பிரச்சினையல்ல எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.