Header Ads



பெண்கள் பாதுகாப்பு – COVID 19 சட்டப் பார்வை

மு.முஹம்மது நப்சர், LL B, MBA (SEUSL)

பெண்களுக்கான பாதுகாப்புகள் பற்றி இதில் குறிப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு எதிரான ஆக்கமாக இது பார்க்கப்படலாகாது. ஏனெனில் அன்று தொடக்கம் இன்று வரை திருமணம் மூலம் அல்லது திருமணத்திற்கு முந்திய உறவுகள் மூலம் பெண்கள் ஏமாற்றப்படும்போது அதில் பாதிக்கப்படும் மூன்றாம் தரப்பினராக களங்கமற்ற பிள்ளைகள் காணப்படுகின்றார்கள். தகப்பன் அல்லது தாய் இல்லாத பிள்ளைகளை நமது சமூகம் நடாத்தும் விதத்தில் அவர்கள் சமூக விரோதிகளாக, பிறழ்வு நடத்தை கொண்டவர்களாக, தற்கொலை புரியக்கூடியவர்களாக மாற்றமடைகின்றனர். எனவே இவ்வாக்கமானது ஏமாற்றுப் புத்தியுடையோருக்கானது எனப் புரிதல் நன்றாகும.; மேலும் கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்புலத்தலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. அத்துடன் ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் வித்திட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் இறைவனின் உன்னதமான  படைப்பினம் என்பதுடன் அவர்கள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

இந்நோய் பரவியுள்ள இக்காலகட்டத்தில் கசப்பான சம்பவமொன்று ஒரு கிராமத்தில் அறியக்கண்டேன். அங்கு ஒரு அநாதரவான ஒரு பெண்பிள்ளையின் காதலிப்பபாக கூறி ஒரு இளைஞன் பல தடவைகள் அவளை தனிமையில் சந்தித்து வந்திருந்தான். அண்மையில் அவர்களை கையும் களவுமாக அயலவர்கள் பிடித்து இறுதியில் பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் வழமைபோன்று பலமுள்ளவர்கள் கதையை திசை திருப்பிவிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டது அந்த பெண்பிள்ளை என்பதில் மாற்றக் கருத்திற்கிடமில்லை.  இவ்வாறான தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களின்போது பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைச் சட்டங்கள் காணப்படுகின்றன.

1897 ம் ஆண்டு 03ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் ஒருவருடைய வீட்டிற்கு அந்நியர் ஒருவருடைய உள்நுழைவை உறுதிப்படுத்தும் போது அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதேபோன்று 19ம் இலக்க 1907ம் ஆண்டு திருமண பதிவு கட்டளைச்சட்டத்தின் பிரிவு 20 இன் ஏற்பாடும் முக்கியமானதாகும். குறிப்பாக இப்பிரிவானது திருமண ஒப்பந்த வாக்குறுதி பற்றி எடுத்தியம்புகின்றது. பிரிவு 20(1) இன் பிரகாரம் கற்பழித்தல் அல்லது வேறு ஏதாவது இது தொடர்பிலான காரணிகள் உட்பட ஏதாவது திருமண வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ஏதாவது நடவடிக்கை மூலம். திருமணத்தினை கட்டாயப்படுத்த முடியாது. ஆனாலும் அதற்கான ஒரு நிபந்தனை காணப்படுகின்றது. அதாவது திருமணத்திற்கான வாக்குறுதியானது எழுத்தில் காணப்படும் போது அங்கு வாக்குறுதி மீறலுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் இச்சட்டத்தின் பிரிவு 45 இன் படி திருமணம் தொடர்பில் பிழையான தகவல்களை தெரிந்து கொண்டே வழங்கியிருப்பின் அது தண்டனைச் சட்டக்கோவை அத்தியாயம் XI இன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். 

அதுமாத்திரமன்றி தண்டனைச்சட்டக்கோவையிலுள்ள சில பிரிவுகளை தெரிந்து வைத்திருத்தல் பெண்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்பது திண்ணம். குறிப்பாக  345ம் பிரிவில் தாக்குதல் மூலம் அல்லது குற்றவியல் பலாத்காரம், செய்கை மற்றும் வார்த்தைகளை பிரயோகிப்பதன் மூலம் பாலியல் தொல்லை இன்னொருவருக்கு செய்திருப்பின் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும். மேலும் 362(அ) இன் படி ஆணொருவர் தன்னைச்சட்டப்படி மணஞ்செய்யாத பெண்ணொருத்தியை தன்னைச்சட்டப்படியாக அவர் மணந்துள்ளார் என வஞ்சனையால் நம்பவைத்து அதன் மூலம் வாழ்க்கை நடாத்த துண்டப்படுதல் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோன்று கணவன் அல்லது மனைவி உயிருடனிருக்கும் போது வேறு மணம் புரிதலானது பிரிவு 362(ஆ) இன் படி ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் முன்னைய திருமணத்தினை மறைத்தலும் சட்டமுறையான திருமணத்தை வஞ்சக நோக்கோடு நிறைவேற்றலும் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். 

இறுதியாக தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 364 பற்றிய அறிவு எம் அனைவருக்கும் காணப்படவேண்டும். அதாவது, கற்பழிப்புத் தவறொன்று ஏழு ஆண்டுகளுக்கு குறையாத இருபது ஆண்டுகளுக்கு மேற்படாத காலத்திற்கு தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். அத்துடன் இதில் பகிரங்க அலுவலராக அல்லது அதிகார நிலையிலுள்ள ஆட்கள் தனது அலுவலக காப்பிலுள்ள பெண்மீது தவறாக தடுத்து வைத்து கற்பழிப்பு புரிதல், ஒரு வைத்தியசாலை முகாமையிலுpருந்து அல்லது பணியாட்தொகுதியிலிருந்து தனது நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி ஒரு பெண் மீது கற்பழிப்பு புரிதல், பதினெட்டு வயதுக்கு கறைந்த ஒரு பெண் மீது கற்பழிப்பு புரிதல் போன்ற இன்னும் பல விடயங்கள் தண்டனைக்குரிய குற்றங்களாக பார்க்கப்படுகின்றது. 

எனவே, இன்றைய சூழ்நிலையில் விபத்துக்கள் குறைவாகக் காணப்பட்டலும் மேற்சொன்ன விடயங்களுடன் தொடர்புபட்ட குற்றங்கள் மலிவாகவே காணப்படுகின்றன என்பதனை உணர்ந்தவர்களாக சய புத்தியடன் நடந்து எம் எதிர்கால சந்ததிகளைக் காப்போம்.

No comments

Powered by Blogger.