Header Ads



இன்னமும் மனிதம் உயிர் வாழுகின்றது

By:    M.I.Y. Suhood

என்னுடைய வாப்பா என்னிடம் சொன்ன கதை இது. எங்கட காலத்தில் எங்கட அகண்ட கிராமத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம். சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிங்களவர்களும் வந்து குடியேற ஆரம்பித்தனர். அவர்களுடனும் நாங்கள் மிகவும் ஒற்றுமையாகவும் ஒன்னுக்குள் ஒன்றாகவுமே பழகி வந்தோம். அவர்கள் வீட்டுக்கு  நாங்கள் போவதும் அவர்கள் வருவதும் வீடுகளில் ஒன்றாக சாப்பிடுவதும் தேநீர் கடைகளில் ஒன்றாக அமர்ந்து ஒன்றாகத் தேநீர் பருகி அதற்கு ஒருவர் தனது பணத்தைக் கொடுத்துவிட்டு மாலையானதும் பிரிந்து செல்வதும் சோறு சமைத்து சாப்பிடுவதற்கு அருகில் உள்ள காடுகளுக்குச் செல்வது எல்லாம் மிகவும் வாடிக்கையான விடயங்கள். 

மகாத்மா காந்தி சொன்ன இந்தியா எங்கட கிராமத்தில்த்தான் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மக்கள் தங்களுடைய காணிகளில் ஒரு பகுதியினை பேதம் பாராது மற்றவர்களுக்கு குத்தகைக்குக் கொடுப்பதும் வழக்கமான விடயம். கல்யாணம் காட்சி என்றால் சொல்லவே தேவை இல்லை போங்கள். இன்னொரு விடயம் சொல்லப் போனால் ஒருமுறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடையும் நிலையில் இருந்த முஸ்லிம் வேட்பாளரை வெற்றிபெற வைத்த பெருமை எமது தமிழ்க் கிராம முழு மக்களும் என்றால் அது மிகையாகாது. ஏன் சிங்கள மக்களும் முஸ்லிம்களுடன் ஒன்றாகப் பிணைந்திருந்தனர். 

பாடசாலையில் ஏன் கல்லூரியிலும்தான் விடுமுறை காலங்களில் யாழ்ப்பாணம் மன்னார் மற்றும் மட்டக்களப்பு போன்ற இடங்களில் எங்களுக்குப் படிப்பித்த தமிழ் ஆசிரியரகளிடம் நாங்கள் சென்றால் அவர்களது குடும்பமே எங்களை அவரகளது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அங்கிருந்து திரும்பி வரும்போது எங்களுக்கு பரிசில்களும் வாங்கித் தருவார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களையோ அல்லது அங்கு வரும் உறவினர்களையோ அழைப்பதாக இருந்தால் கூட ஒரு கண்ணியமான உறவுமுறைகளைக் கொண்டே அழைப்பதற்கு எங்களைப் பழக்கினார்கள். எங்கள் உள்ளுர் பாடசாலைகளில் கூட மூன்று இன மாணவரகளும் ஒன்றாகவே இருந்து கல்வி கற்ற காலம் அது.

என்ன ஒரு 50 - 60 வருஷத்துக்கு சற்று முற்பட்ட கதை இது. எந்த அடிபிடியும் இல்லை. எந்த துவேசமும் கிடையாது. ஆந்தக் காலத்தில் குற்றங்களே நிகழ்வது இல்லை. சிறுசிறு குற்றங்களான களவு சூது சண்டை என்பன கூட இருக்கவில்லை. அப்படியிருந்தாலும் அது அந்தந்த சமூகத்திற்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இது எங்களுடைய கிராமத்தில் மாத்திரமல்ல முழு வடக்கு கிழக்கு கிராமங்களிலும் காணப்பட்ட சிறப்பியல்பாகும். என்னைப் பொருத்தளவில் என்று இனங்களுக்கு என்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு நச்சு விதைகள் மக்கள் உள்ளங்களில் வீசப்பட்டதோ அன்றிலிருந்து படிப்படியாக அவ் நச்சு விதைகள் ஆழமாகப் பரவி இன்று முஸ்லிம்களின் கொரணா தக்குதல்களுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் உடலை எரிக்கத்தான் வேண்டும் என்ற அளவிற்கு அரசே அடம் பிடிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. 

ஆனால் எமது மக்கள் இன ஒற்றுமையிலும் சௌஜன்னிய வாழ்க்கையிலும் இன்னமும் பெரு நம்பிக்கையோடு இருக்கின்றார்கள் என்பதனை ஜனாதிபதி சட்டத்தரணி சகோதரன் சுமந்திரன் ஐயா அவரகளும் இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரியின் தலைவரான வைத்தியர் சகோதரன் ரவி குமுதேஷ் அவர்களும் இனங்களுக்கு இடையே விதைக்கப்படும் துவேஷத்திற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் போர்க் கொடி தூக்கியிருப்பது இன்னமும் மக்கள் மனதில் இருக்கக்கூடிய மனிதம் சாகவில்லை என்பதற்கு சீரிய உதாரணமாகும்.

This is the story that my father told me. It was a time when Tamils ​​and Muslims lived together in a vast village (even now in my time too). After the Sinhala settlement, they also lived together without any any discrimination. We used to be very united and united with them. We used to go others home eat and play; and then go to tea shop to sip tea together and give one's money and then take leave. Later in one day, we go to the nearby forest to cook and eat the rice.

You see, our village was just looked like the description of India that Mahatma Ghandi had in his vision about India.  It is customary for people to lease a portion of their land to the people of other communities. Needless to say, about a wedding scene. To put it another way, it is no exaggeration if the entire population of Tamil community is proud to win a Muslim candidate who about to lose in the parliamentary election. Sinhalese too get together with the Muslim and Tamil communities.

If we go to the Tamil Teachers who taught us in Jaffna, Mannar and Batticaloa during the holidays, their  family put us on their heads. They give us whole days food, sleeping facilities and excursion in their town on their expenses. They give us their area local products as gifts, and send them us back our home.They teach us how to have a polite relationship with their families especially ladies and other home-people, and their home coming relations. It was a time when all three ethnic students were co-educated in our local schools.

This was a story just before 50 - 60 years. There is no beating. There is no opening. There are no crimes or petty crimes during the period, not even gambling. Even so, it would be confined within the respective community. This is a characteristic not only in our village but also in the entire North and East. Since the poisonous seeds were thrown gradually into the minds of the people by the communal political parties, and influential political and media personals.. This brought to the level of burning the bodies of Muslims who have been subjected to Covid.

But our people still have high hopes for communal harmony and better the social life. In fact, that the President's Council Attorney-at-Law Brother Sumanthiran Sir; and the President of the Sri Lanka College of Medical Sciences, Brother Dr. Ravi Kumudesh, have raised the war flag openly in favour of the affected Muslim community, and support the affected minority people. This is a stark example still humanity lives in the people of Sri Lanka.

All are good for the best


2 comments:

  1. A clergy's body was cremated in a temple premises in Mulathivu recently in spite of civilian's protest and against the court order. A case has been filed in High court and due to take up for inquiry on Sep 16' 20. This is how Tamil community leaders react when there is a threat against for their traditions and culture.

    There were no communal political parties and Muslim influential politicians in 1815 when communal violence was imposed against Muslims in Matale, in 1970s nine Muslim worshipers were brutally murdered inside a Mosque in Puttlam town, and many more incidents which reflected barbarism on Muslims.

    It's a very heinous and shameful attempt to blame Muslim politicians while safeguarding irresponsibly of so called Islamic intellectuals who have brought this situation of burning up-to Muslim Janazas

    ReplyDelete
  2. Jaffnamuslim.com: I sent my comments rejecting the speculation expressed and written by Suhood. I’ve no idea why you haven’t published it upto now.

    I’ve my doubts whether you are making some deals with particularly with ACJU members for not publishing counter comments on them and getting some benefits in return.

    ReplyDelete

Powered by Blogger.