Header Ads



கொரோனா ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன, பேராசிரியர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரை கொலை செய்த நபரும் நபர் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த டாக்டர் பிங் லியூ(37), பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர். 

ரோஸ்டவுன்ஷிப் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. பல உண்மைகள் வெளிவந்து விடும் என்ற பயமோ.
    உலகத்துல ஏதேதோ நடக்கிறது.
    எல்லாமே புரியாத புதிராகவே இருக்கிறது.

    ReplyDelete
  2. This is normal...
    super powers use scientists to achieve their targets...

    then they will not worry about killing these scientists due to the fear that .. these scientist will pass the knowledge to other nations.

    ReplyDelete
  3. சீன உளவாளிகளாகவும் இருக்கலாம் அல்லது அமெரிக்கா வின் இந்நோய் சம்பந்தமான சதி சூழ்ச்சிகள் அம்பலமாவதை தடுக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.