Header Ads



நாட்டிற்கு துணிச்சலான தலைவர் கிடைத்திருக்காவிட்டால் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது


ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மே 16, 2009 அன்று தன்னை அழைத்ததாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதலை கைவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டிற்கு சிறந்த மற்றும் துணிச்சலான தலைவர் கிடைத்திருக்காவிட்டால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது எனவும், மூன்று தசாப்த கால யுத்தத்தினை முடிவுக்குகொண்டு வந்திருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மே 16, 2009 அன்று தன்னை அழைத்ததாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை கைவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதன் போது பாதுகாப்பு படையினரை ஊக்குவித்தமையையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அந்த நேரத்தில் ஈரானில் இருந்த ராஜபக்ச, போர்க்களத்தில் சமீபத்திய நிலைமை குறித்து விசாரிக்க தன்னை அழைத்தமையையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஐரோப்பிய நாடுகளால் அப்போதைய ஜனாதிபதியின் மீது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, புலிகள் மீதான இராணுவத் தாக்குதலை மீண்டும் ஒரு முறை கைவிட பாதுகாப்புப் படைகள் கட்டாயப்படுத்தப்படுமா என்று தான் அவரிடம் கேட்டதாகவும் இராணுவ தளபதி கூறியுள்ளார்

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி, தனது திறமையான தலைமைத்துவத்தின் மூலம், பாதுகாப்பு படையினருக்கு விடுதலைப் புலிகளை அழிக்க தேவையான சூழலை உருவாக்கியதாக” மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.