Header Ads



இனவாத வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் தோற்றம் பெறாத அளவிற்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்பு மற்றும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் குழு ஆகியோர் அழிக்கப்பட்டாலும் அவர்களின் ஆதரவாளர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள்.

இனவாத வன்முறைகளை நாட்டில் இனியொருபோதும் தோற்றம் பெறாத அளவிற்கு தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின்  உப தலைவர் மதுமாதவ அரவிந்த  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை -21- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கொடூரமானவர்கள் அல்ல அவர்கள் இனத்துக்காக போராடியவர்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமை தவறான கருத்தாகும். தமிழ் மக்கள் மத்தியில் இனவாத வெறுப்புக்களை தூண்டிவிடும் விதமாகவே இவரது கருத்துக்கள் காணப்படுகின்றன.

விடுதலை புலிகள் அமைப்பினதும், தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் நோக்கங்களை நிறைவேற்றும் தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள்  அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள்.

கொரோனா வைரஸ் விவகாரத்திலும்  எதிர்தரப்பினர் இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்தார்கள்.

நாட்டில் இனவாத வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் தோற்றம் பெறாத அளவிற்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் என்றார்.

1 comment:

Powered by Blogger.