Header Ads



நான் ஒரு புலமையாளராக உருவாக, சுக்ரியின் ஆளுமை உதவி புரிந்தது, அவரது இழப்பு முழு இலங்கைக்குமானது - கலாநிதி ரோஹித

Dr, Shukri, அவர்களின் மறைவு தொடர்பாக, தமிழ் பேசும் உலகில் ஏற்பட்ட அதிர்வும், அனுதாபமும், சகோதர சிங்கள மொழி பேசும் புலமையாளர்களிடையேயும், மக்களுடையேயும், எந்தளவு தாக்கம் செலுத்தியுள்ளது ???என்ற கேள்வி என் மனதில் நிலவிய போது, நண்பரு,ம் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவருமான, கலாநிதி ரோஹித்த தஸநாயக்கவின் இந்தப் பதிவு வந்திருக்கின்றது,

"#கலாநிதி_சுக்ரி, #இலங்கையின்_சொத்து"

"கலாநிதி சுக்ரி அவர்கள் மறைவுச் செய்தி மனவருத்தத்தை தந்துள்ளது, புலமைத்துவத்தில் சிறந்த சுக்ரி அவர்கள் அறிவுலகத்திற்கு பல பங்களிப்புக்களைச் செய்தவர், அதில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான அவரது நூல்கள் மிக முக்கியமானவை, அதிலும் அவரது "Muslims of Srilanka "என்ற நூல் மிகப் பிரபலமானது ் இலங்கைத் தீவில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பான எனது ஆய்வுப் பணிகளின் போது அந்த நூல் மிகச் சிறந்த உசாத்துணையாக உதவி புரிந்தது.,

நான் ஒரு எழுத்தாளராகவும், புலமையாளராகவும் உருவாவதற்கு, கலாநிதி சுக்ரி என்ற ஆளுமையின் செல்வாக்கு மிகவும் உதவி புரிந்தது,அவரது இழப்பு அனைத்து இலங்கையருக்குமான இழப்பாகும், எமது தாய் நாட்டின் ஐக்கியத்திற்காக சேவையாற்றியதற்காக நாம் அனைவரும் அவருக்கு மரியாதை செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.

கலாநிதி ,ரோஹித தஸாநாயக்க.
துறைத் தலைவர்
வரலாற்றுத் துறை 
கலைப்பீடம் 
பேராதனைப் பல.கலைக்கழகம்

20:05:2020

Thanks Mufizal Kalmunai


2 comments:

  1. கலாநிதி சுக்கிரி அவர்களை ஒருமுறைதான் சந்தித்தேன். மிக முக்கியமான நிர்வாகக்கூட்டங்கள் கூட்டங்கள் நடந்துகொண்டிருந்த் ஒருநாளில் திடுபென நளீமியாவுக்குச் சென்றேன். அங்கு என்னைத் தெரிந்த மாணவர்கள் இருந்தார்கள். கலாநிதி சுக்கிரி அவர்களை சந்திக்க வெண்டுமென்றேன். அன்றைய சூழலில் சாத்தியமில்லை என்றவர்களிடம் என் அன்பை மட்டும் சொல்லுங்கள் என்றேன். எனக்கு உடனவே அனுமதி கிடைத்தது. நான் எழுதிய “தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்” என்கிற சிறுபுத்தகம்தான் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித்தந்தது. அரை நாள் என்னோடுபேசினார். நான் சந்தித்த பரந்துபட்ட சிந்தனையும் செயலாற்றலும் உள்ள அறிஞர்களுள் கலாநிதி சுக்கிரி முக்கியமானவர். அவருக்கு கலாநிதி ரோகித தசநாயக்க அஞ்சலி செய்தி வெளியிட்டமை இயல்பானது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

    ReplyDelete
  2. ​காலம் சென்ற அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்களின் மரணச் செய்தி கேட்டு இரங்கல் செய்தி அனுப்பியிருந்த பெருமனிதர் ஜெயபாலன் அவர்களுக்கும் பேராதனை பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கலாநிதி ரோஹித தசநாயக்கா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.