May 23, 2020

கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி - இலங்கை முஸ்லிம்களின் கல்விச்சொத்து


கடந்த ஆறு தசாப்த கால இலங்கை முஸ்லிம்களின் கல்வி மற்றும் வாழ்வொழுங்கு வரலாற்றில் தனித்துவமான இடம் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களுக்கு காணப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமிய கல்வி முறையில் புத்தாக்கச் சிந்தனை தோற்றம்பெறுவதற்கு இவரது மரபு ரீதியான கல்வி முறையும், சமய பின்னணியும் ஐரோப்பிய ஆய்வு முறையும் பெரிதும் துணைநின்றுள்ளது.  அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்களது சமூக மாற்றம் பற்றிய எண்ணக்கருவும் பேராசிரியர் இமாம் அவர்களது  இலங்கையில் இஸ்லாமிய சிந்தனையின் இடைவெளி பற்றிய அடையாளப்படுத்தலும் ஐரோப்பிய பேராசிரியர் மொன்ட்கொமரி வெட் இனது சமயம்சார் கருத்தியலுக்கான ஆய்வு வழிகாட்டலும் புத்தாக்கச் சிந்தனைத் தோற்றம் பெறுவதற்கு வழிகோலியது. 

இஸ்லாமியக்கல்வி மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் தமது மரபுரீதியிலான சிந்தனையிலிருந்து விடுபட்டு பல்லின சமூகத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் புதியதோர் கோணத்தில் தனித்துவம் பிறழாத வகையில் தமது கல்விப் பாரம்பரிய புரட்சியை மேற்கொள்ள அமைதியான சிந்தனைப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக இஸ்லாம் பற்றிய புதிய வாசிப்புக்கான வட்டத்தை உருவாக்குவதில் 'இஸ்லாமிய சிந்தனை' என்ற தரமான சஞ்சிகையை தோற்றுவித்து புரட்சிகரமான சிந்தனை மாற்றத்தை சமூகத்திற்குள் தோற்றுவித்தார்.  இதனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமியக் கருத்துக்களை யதார்த்தபூர்வமாக வாசிக்கவும் விளங்கவும் தலைப்பட்டனர். இதுவே பலரது இஸ்லாமிய சிந்தனையை தெளிவாக புரிந்துக்கொள்ள துணைநின்றது. அது இன்றுவரை தொடர்கிறது. பாடசாலைக்கல்வி முதல் பட்டப்படிப்புவரையான மாணவ சமூகத்தில் நடுநிலையான சிந்தனையாளர்களை உருவாக்குவதில் இஸ்லாமிய சிந்தனையின் பிரதம ஆசானாக நின்று அமைதியான சிந்தனை மாற்றத்தை இலங்கைக்குள் மற்றுமன்றி தமிழ்மொழி பேசும் உலகில் தோற்றுவித்த இலங்கை முஸ்லிம்களின் தேசிய தலைவராக கருதப்படுகிறார். 

தேசியக்கல்விக் கொள்கையின் கீழ் விழுமியக்கல்விக்கான வழிகாட்டலை  வழங்குவதிலும் அதற்hகன உயர்கல்வி நிறுவனங்களை ஸ்தாபிப்பதிலும் கடைசி மூச்சுவரை சோர்வின்றி உழைத்த பெரும் பொக்கிஷத்தை இழந்துள்ளமையை முஸ்லிம்களின் உயர்கல்வி துறைக்கு பெரும் இழப்பாக கருதுகின்றேன். அவரது மாணாக்கர் மற்றும் அவரது சிந்னைகளை உள்வாங்கியோர் அவரின் இழப்பை ஈடுசெய்வார்களா? என்ற கேள்வியோடு இலங்கை முஸ்லிம் சமூகம் ஏங்கி நிற்கிறது.

அல்லாஹ் அவரது பணிகளை பொருந்திக்கொள்வானாக.

கலாநிதி என். கபூர்தீன்
அறபு இஸ்லமிய கற்கைகள் அலகு
கலைப் பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்

2 கருத்துரைகள்:

அவர் உயிரோடு இருந்தபோது இந்த பாராட்டுக்களும் புகழ்வார்த்தைகளும் எங்கே, தனிப்பட்டமுறையில் அவர் வௌியிட்ட கருத்துக்களை தனிப்பட்ட ரீதியிலும் இயக்க அடிப்படையிலும் கடுமையாக விமர்ச்சித்து அவரைக்குளியில் தள்ளிய பலரும் இப்போது புகழ் பாட ஆரம்பித்திருக்கின்றார்கள். 'அல்லாஹ் தூங்குவதில்லை, அவர் அனைத்தையும் கேட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்' என்ற அவனுடைய வாக்குறுதி இவர்களைப் பொருத்தவரை எங்கே செல்கிறது.حسبي الله ونعم الوكيل

We have religious leaders , political leaders business
leaders and social leaders as well as academics.But it
is where do we stand with all of these personalities in
our real life like the one in Maligawatte ? It is not
about how shining a particular personality with his
academic or other achievements , it is about how these
achievements have reached the society and given them a
true breath of relief so that incidents like Maligawatte
never repeats.

Post a Comment