Header Ads



பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து, அடுத்த வாரம் தீர்மானம்

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்றைய தினம் -09- ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவர், சிறுமியருக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாது எனவும், அனைத்து பாடசாலைகளையும் கிருமித் தொற்று நீக்குவதற்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருமித் தொற்று நீக்கியதன் பின்னர் நான்கு நாட்கள் பாடசாலைகளை மூடி வைத்திருக்க வேண்டும் எனவும் பாடசாலை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.