Header Ads



இந்தியாவில் கொரோனாவின் போது முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரிப்பு

கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன.

முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன.

ஜாம்ஷெட்பூரில் விஷ்வ இந்து பரிஷத்தின் பதாகை மற்றும் நாலந்தாவில் பஜ்ரங் தளத்தின் காவிக் கொடிகள் மூலம், காய்கனிகளை விற்பவர்களுக்கு 'இந்துக்களின் கடை' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.