Header Ads



அரசாங்கத்தின் அதிடித் திட்டம், சட்டமா அதிபரின் பச்சைக்கொடியுடன் இடைக்கால கணக்கறிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

எதிர்வரும்  ஜூன் மாதம் முதல் 4 மாதங்களுக்கு, அரச செலவினங்கள் தொடர்பில்  இடைக்கால கணக்கறிக்கை ஒன்றூடாக, ஜனாதிபதிக்கு  பணத்தை பெற்றுக்கொள்ளும் வகையில்  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அறியமுடிகின்றது.

அதன்படி தற்போது நிதி அமைச்சு அது குறித்த இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை தயாரித்து வருவதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பின்  அதிகாரங்களுக்கு அமைவாக, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு இந்நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. 

நாட்டில் வரவு - செலவுத் திட்டம் இல்லாத, தற்போதைய சூழலை ஒத்த தேர்தல்  கால கட்டத்தில் அத்தியவசியமான அரச செலவினங்களை ஈடு செய்ய, இடைக்கால கணக்கரிக்கை தயாரித்து 

செலவு செய்யவும், பாராளுமன்றம் மீள கூடியதும் அதனை சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக கருதப்படும் நிலையில், அதன்படி நிதி அமைச்சு இடைக்கால கணக்கறிக்கையை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

No comments

Powered by Blogger.