Header Ads



நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் சோபையிழந்ததா...?

- M.S.M. JANSIN -

புனித நோன்புப்  பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிகள் அனைவருக்கும் உள்ளம் கனிந்த ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 

இந்த ஈதுப் பெருநாள் உலகில் ஏறக்குறைய 195 நாடுகளில்  மிகவும் அடக்கமாக சமூக இடைவெளிகளைப் பேணி   வீட்டு மட்டத்தில் கொண்டாடப் படுகின்றது. உண்மையில் இந்த கொரோனா முடக்கத்தால் நிறைய பாதகங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்களுக்கு ஒரு சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. இந்த கொரோனா முடக்கத்தை உலக நாடுகளில் பலர் சிறைவாழ்க்கையை விட மோசமான  இருட்டு அறையில் அடைக்கப் பட்டது போன்ற ஓர் உள்ளுணர்வுடன் அனுபவித்து வந்தனர். வேதணை தாங்காமல் மக்கள் தாமாக தம்து வீடுகளில் இருந்து இசையை இயற்றி தம்மைச் சமாதானப் படுத்த முயன்று அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை. 

இந்த முடக்கத்தால் உலக நாடுகளில் ஏராளமானோர் மனோ உலைச்சல்களுக்கு உள்ளாகி  நிம்மதியிழந்து தவிக்கின்றனர். வெளியே செல்ல முடியாமல் நண்பர்கள் உறவினர்களை சந்திக்க முடியாமல்,  தொழிலுக்குச் சென்று அங்கு தமது நேரங்களை ஒதுக்க முடியாமல்,  தமது வணக்க வழிபாடுகளை செய்து ஆன்மதிருப்தி கொள்ளமுடியாமல், பாடசாலைகளுக்குச் செல்ல முடியாமல் , விளையாட முடியாமல், சுற்றுலாக்கள் செல்ல முடியாமல் நெலிந்து ஒடிந்து வாழ்ந்து வெருத்துப் போயுள்ளனர். அத்துடன் பணமின்றி, உண்ண உணவின்றி உதவி செய்ய மனிதர்கள் இன்றி இப்படி எத்தனையோ உடல் ரீதியான துன்பங்களையும் இந்த மனிதர்கள் அனுபவித்து வாழ்ந்து கொன்டுள்ளனர். 

இவ்வாறான கஷ்ட நிலையை முழு உலகமுமே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அதனை ஒரு சவாலாக இல்லாமல் வெரும் அல்லாஹ்வின் சோதனையாக எண்ணி வாழ்ந்து வருபவர்கள்  உலகத்தில் முஸ்லிம்களைத் தவிற யாரும் இல்லை. 

இஸ்லாம் அனைத்தி விதமான பிரச்சினைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் தீர்வை முன்வைக்கும் முன்வைத்துள்ள ஒரு மார்க்கம் என்பது  இன்றைய இந்த கொரோனா முடக்கம் தனிமைப் படுத்தல் என்பன நமக்கு காட்டித்தந்துள்ளது. 

வீடுகளில் வெருமனே முடங்கி என்ன செயவதென்று தெரியாமல் பெரும்பாலானோர் அல்லலாய்க்கும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் மட்டுமே இறை தியானத்தை செய்து மன அமைதியுடன் வாழ்கின்றனர் என்ற செய்திகள் வெளிநாடுகளில் இருந்து வந்து கொன்டுள்ளது.  முஸ்லிம்கள்  முழு நாளையுமே வீணாக கழிக்காமல்  தமது நாளை ஸுபுஹு தொழுகையுடன் ஆரம்பித்து அதன் பிறகு குர் ஆன் ஓதுதல் என்று தொடர்ந்து ஆறு மணி நேரத்தின் பின்னர் ளுஹரையும், அடுத்த மூன்று மணித்தியாலத்தில் அஸர் தொழுகையையும் அடுத்த மூன்று மணித்தியாலத்தில் மஹ்ரிப் தொழுகையையும் அடுத்த இரண்டு மணித்தியாலத்தில் இஷா தொழுகையையும் தந்து மனதை நம்மைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பவும் அவனிடம் எமது பிரச்சினைகளை கூரி அதற்கான தீர்வைக் கேட்கக் கூடிய சந்தர்ப்பத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தந்தான். 

இந்த கொரோனா நெருக்கடிக் காலத்துக்குள் நமக்கு  ஏனைய மாதங்களை விட சிறப்பான ஒரு மாதத்தைத் தந்து அதில் அனுநேரமும் அல்லாஹ்வின் சிந்தனையுடன் இறயச்சத்துடன் எமது செயல்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு மாதத்தையும் எமக்கு அல்லாஹ் தந்திருந்தான். இந்தக் காலம்  பகலெல்லாம் நோன்பு நோற்கவும், பகலிலும் இரவிலும் புனித குர் ஆனை ஓதவும், இன்னும் தஹஜ்ஜத்துத் தொழவும் ஏனைய சுன்னத்துகளைச் செய்யவும் அல்லாஹ் நமக்கு சந்தர்ப்பத்தைத் தந்து மனோ உலைச்சல்களிலிருந்தும் மனோவியாதிகளிலிருந்தும்  முஸ்லிம்களை பாதுகாத்தான். 

இவ்வாறான சூழ்னிலைகளைத் தேடி அழைந்தவர்கள் தான் இறை நேசர்கள் எனும் அவுலியாக்கள் என நாம் அழைப்பவர்கள். இன்று ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் அந்த இறை நேசர்களை ஒத்த வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கடந்த வருடங்களை விட இம்முறை நோன்பு நோற்றவர்களின் விகிதம் அதிகம். அதை நூறு விகிதம் என்றே சொல்லலாம். அதேபோன்று கடந்த காலங்களை விட அல் குர் ஆனை ஓதியவர்கள் ஏராளம். திக்ர் திலாவத்து ஹதீஸ் வாசித்தல் போன்றவற்றில் தமது நேரத்தைப் பயன்படுத்தியோர் ஏராளம். அதுமட்டுமல்ல வீட்டிலுள்ள பெண்களும் சிறார்களும் இந்த முடக்க காலத்தில் மார்க்க சட்டதிட்டங்களை நடைமுறையில் அறியும் சந்தர்ப்பத்தையும் அவற்றைச் செயல் படுத்தும் சந்தர்ப்பத்தையும் அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். 

இப்போது நமது சமூகம் ஏழைகளில் பசியையும் கஷ்டங்களையும் நன்கு உணர்ந்த ஒரு சமுதாயம். அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டுமென்று அறிந்து அதனைச் செயல்படுத்தும் பாக்கியம் பெற்ற காலம். 

உலகில் மனிதர்கள் எல்லோரும் மற்ற மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் தனது மனைவி நல்லவளாக இருக்கவேண்டும், மகன் நல்லவனாக இருக்க வேண்டும் மகள் நல்லவளாக இருக்க வேண்டும் தனது முதலாளி நல்லவராக இருக்க வேண்டும் தமக்கு கீழுள்ளோர் தொழிலாளிகள் நல்லவராக இருக்க வேண்டும் என ஆவல் கொன்டுள்ளனர். இந்த கொரோனாவும்  அதன் பிறகு வந்த  ரமலான் மாதமும் முஸ்லிம்களை மனிதப் புனிதர்களாக மாற்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த மனிதத் தன்மையை ஏழைகள் மீது இறக்கம் காட்டும் தன்மையை, முதியவர்களை மதிக்கும் தன்மையை சிறியோர் மீது அன்பு செலுத்தும் தன்மையை, உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கும் முதலாளியை, ஊதியத்துக்கேற்ப நேர்மையாக வேலை செய்யும் தொழிலாளியை  தரமான பொருட்களை நியாயமான விலையில் விற்கும்  வியாபரியை நல்ல மனைவியை, இப்படி எத்தனையோ நல்லவைகளை மக்கள் எதிர்ப்பார்த்துள்ளார்கள். 

அவர்கள் எதிர் பார்க்கும் நல்லவர்களை உருவாக்குவதில் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு  ஒன்று தான் எல்லா அமல்களையும் விட அதிக பங்களிப்புச் செய்கின்றது. இந்த ரமலான் நம்மை விட்டு விடை பெற்றுச் சென்றாலும் அதில் முஸ்லிம்கள் பெற்ற படிப்பினைகள் அவர்கள் மனதில் உருவாகியுள்ள நல்லெண்ணங்களை தொடர்ந்தும் அவர்கள் ஏனைய மாதங்களிலும் கடைப் பிடிப்பதன் ஊடாகவும் ஏனையவர்களை அந்த வாழ்க்கையின் பக்கம் திசை திருப்பி அவர்களையும் நல்லவர்களாக வாழவைக்கும் காலத்தில் தான்  உலகம் எதிர்பார்க்கும் யுத்தமற்ற ரத்தமற்ற பூமியை நாம் காணமுடியும். 

இன்றைய நோன்புப் பெருநாள்  தொழுகை உலகில் கொரோனா தாக்கத்துக்கு மத்தியிலும் பல்வேறு நாடுகளில் தொழுகை  பள்ளிவாசல்களில் நடத்தப் பட்டுள்ளது. சவுத்தி அரேபியாவின் மக்கா மதீனா புனித தளங்களில் பெருநாள் தொழுகை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.  பேங்கொக், துருக்கி, இந்தோனேசிய போன்ற நாடுகளில் சமூக இடைவெளி பேணப் பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது. 

நீண்ட பல ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக பலஸ்தீன் தாக்குதல் அற்ற அமைதியான ஒரு நோன்புகாலத்தையும் நோன்புப் பெருநாளையும் சந்தித்துள்ளது இந்த கொரோனாவின் நன்மைகளில் மிகப் பெரிய நன்மையாகும். 

கோரோனாவினால் அதிக நன்மையடைந்த  ஒரு சமூகம் முஸ்லிம்கள் மட்டுமே. இந்தக் காலம் அவர்களுக்கு இறையச்சத்தை அதிகரித்து மனிதப் புனிதர்களாக வாழ்வதற்கான பக்குவத்தை வழங்கியுள்ளது. 

இவ்வாறான நன்மைகள் மத்தியில் ஒரு சில கசப்பான விடயங்களும் சில நாடுகளில் நடந்தேறியுள்ளது.   இருந்தாலும் ரமலான் அதற்கும் தீர்வைத் தரும். கொரோனா தொற்று நோயாக இருந்தாலென்ன, பூமியதிர்ச்சியாக இருந்தாலென்ன, சுனாமி ஆழிப் பேரலையாக இருந்தாலென்ன, வெள்ளப் பெருக்காயிருந்தாலென்ன எல்லாவற்றுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருத்தமான வணக்க வழிபாடுகளையும் வாழ்க்கை  முறையையும் கொண்ட மார்க்கம் இஸ்லாம்  என்பதை இந்த கொரோன உலகக் கிருமித் தாக்கமும் ரமலானில் அதனை முஸ்லிம்கள் கையாண்ட விதமும் நமக்கு காட்டித்தருகின்றன. ஏழைகள் வீடு தேடிச் சென்று உதவியளிக்கப் படவேண்டியவர்கள் என்பதை சில நிகழ்வுகள் இந்த கொரோன வறுமை நிரம் சிவப்பாக நமக்கு காட்டித்  தந்துள்ளது. இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றியிருந்தால்  இந்த அனர்த்தம் பேசு பொருளாக மாறியிருக்காது. வுழூ எனும் தொழுவதற்கு முன் தண்ணீரால் உடலின் கை, முகம், வாய், கால்களை கழுவிக் கொள்ளும் முறையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் சொல்லித் தந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூறும் கொரோனா பாதுகாப்பு சுத்திகரிப்பு முறையை விட இந்த வுழு எனும் சுத்திகரிப்பு முறை மிகப் பாதுகாப்பு வாய்ந்ததாக காணப் படுவதை நாம் காணலாம். 

யா அல்லாஹ்! எமது நோன்புகளை நீ அங்கீகரித்து நோன்பில் பெற்ற பக்குவங்கள் நல்லொழுக்கங்களை வாழ் நாள் முழுவதும் கடைப் பிடிக்க அருள் புரிவாயாக! 
யா அல்லாஹ்!  சிரியா, ஈராக், ஆப்ஹானிஸ்தான், பலஸ்தீன்  போன்ற நாடுகளில் தாய் தந்தை இன்றி உண்ண உணவின்றி அநாதைகளாக அழையும் சிறுவர்களை நீயே பாதுகாப்பாயாக! இந்த நாடுகளில் அமைதியான சூழ் நிலை உருவாக தௌபீக் செய்தருவாயாக! 
மேலும் உலக மக்களுக்கு ஹிதாயத்தை வழங்கி அவர்களும் இந்த ரமலானின் பாக்கியங்களை அடைய வழி ஏற்படுத்துவாயாக!
 நீ யாருக்கெல்லாம் ஹிதாயத் எனும் நேர்வழியை நாடியிருக்கின்றாயோ அவர்களுக்கு மிக விரைவில் ஹிதாயத்தை நஸீபாக்குவாயாக!
 முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் உனது பள்ளிவாசல்களையும்  பாதுகாத்து நிம்மதியான ஓர் சூழலை உருவாக்குவாயாக!
உலகைப் பிடித்துள்ள இந்த கொரோனாவின் பாதிப்புகளிலிருந்து முஸ்லிம்களை நீ பாதுகாப்பாயாக! முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் நல்லெண்ணம் கொண்டவர்களை பாதுகாப்பாயாக! 
தொடர்ந்து ஏற்படக் கூடிய பஞ்சங்கள், நோய்கள், மண்சரிவுகள் பூமியதிர்ச்சிகள் போன்றவற்றிலிருந்து முஸ்லிம்களை நீ பாதுகாப்பாயாக!
உலகில் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் நீ விரும்பக் கூடிய சிறந்தவர்களை மக்களுக்கு பொறுப்பானவர்களாக அமர்த்துவாயாக! 
மிக விரைவில் உனது பள்ளிகளை மீண்டும் அதிகமானவர்களைக் கொண்டும் அவர்களின் நல்லமல்களைக் கொண்டும் அழகு படுத்துவாயாக!
இந்தப் பெருநாளில் யாரெல்லாம் உண்ண உணவின்றி அல்லல் படுகிறார்களோ அவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!  
இந்த நோன்புப் பெருநாளை அமைதியான மகிழ்ச்சியான பெருநாளாக ஆக்கி அருள்புரிவாயாக!
ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் பாக்கியத்தை எமக்களிப்பாயாக! 

ஆமீன் யாரப்பல் ஆலமீன்

1 comment:

  1. ஏன் முஸ்லிம்லை மற்றும் காப்பாற்று என்று துவாகேட்கின்றீர்கல் உலக மக்கழ் னைவருக்கும் துவாகேலுங்கள் brother

    ReplyDelete

Powered by Blogger.