Header Ads



வெளிநாட்டில் உள்ள மகனை அழைத்துவர அதிகார துஸ்பிரயோகம் செய்யவில்லை - குற்றம் புரிந்ததாக உணர்ந்தால் பதவிவிலக தயார்

வெளிநாட்டில் நிர்க்கதியாக இருந்த மகனை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக தமது அதிகாரம் எதனையும் பயன்படுத்தவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனது மகனை இலங்கைக்கு வரவழைக்க சிறப்பு சலுகையை பயன்படுத்தியதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

நெதர்லாந்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டுள்ள தனது மகன் விதுர கஸ்யாபா தேசப்பிரியவை இலங்கைக்கு வரவழைக்க தாம் ஜனாதிபதியின் செயலத்தை தொடர்பு கொண்ட போதும் ஜனாதிபதியுடன் ஒரு போதும் தொடர்பு கொள்ளவில்லை என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் வெளியுறவுத்துறை மேலதிக செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, இது தொடர்பில் தகவல் தந்துள்ளார்.

ஏனைய இலங்கையர்களை போலவே மஹிந்த தேசப்பிரியவின் மகனும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அவருக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் நேரடி பதில்கள் எவையும் வெளியாகவில்லை.

எனினும் மஹிந்த தேசப்பிரிய தமது பேஸ்புக் பக்கத்தில் தமது நியாயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், யாராவது தாம் குற்றம் புரிந்ததாக உணர்ந்தால் தாம் பதவிவிலக தயார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.